இணையத்தில் மின்னும் திரைக்கலைஞர்கள்

கொரோ­னா­வின் பேயாட்­டத்­தால் திரை­யு­ல­கம் முடங்­கிக் கிடக்­கிறது. இத­னால் லைட்­மேன்­கள் முதல் உச்ச நடி­கர்­கள் வரை அனை­வருக்­கும் வரு­மா­னம் பறி­போய்­விட்­டது.

ஆனால் இந்­தச் சோத­னை­யான கால­கட்­டத்­தி­லும் சிலர் புத்­தி­சா­லித்­த­ன­மா­கச் செயல்­பட்டு சம்­பா­தித்து வரு­கி­றார்­கள். இவர்­க­ளுக்­குக் கைகொ­டுப்­பது ‘யூடி­யூப்’, இணை­யத் தொடர்­கள், திறன்­பேசி செய­லி­கள் ஆகி­ய­வை­தான்.

நடி­கை­கள் ஷ்ரு­தி­ஹா­சன், ஹன்­சிகா மோத்­வானி உள்­ளிட்ட நடி­கை­கள் சிலர் சொந்­தப் பெய­ரில் ‘யூடி­யூப்’ சேனல்­கள் தொடங்­கி­யுள்­ள­னர்.

சினிமா மூலம் கிடைத்த புக­ழும் ரசி­கர்­களும் கைகொ­டுப்­ப­தால் இவர்­க­ளு­டைய ‘யூடி­யூப்’ அலை­வ­ரி­சை­யில் லட்­சக்­க­ணக்­கா­னோர் உறுப்­பி­னர்­க­ளாக சேர்­கின்­ற­னர்.

இசை­ய­மைப்­பா­ளர் இமான் வெற்றி பெற்ற தனது பாடல்­களை உரு­வாக்­கிய விதம், அவை பட­மாக்­கப்­பட்ட விதம், அப்­போது கிடைத்த அனு­ப­வங்­கள் ஆகி­ய­வற்­றைத் தனது சேன­லில் விலா­வா­ரி­யா­கப் பேசி­வ­ரு­கி­றார்.

தயா­ரிப்­பா­ள­ரும் நடி­க­ரு­மான சித்ரா லட்­சு­ம­ணன் ‘டூரிங் டாக்­கீஸ்’ என்ற சேனலை நடத்­து­கி­றார். அதற்­கு கிடைத்த வர­வேற்பு உற்­சா­கப்­ப­டுத்­த டூரிங் சினி­மாஸ், ஆன்­மீக டாக்­கீஸ் என்று மேலும் பல தலைப்­பு­களில் அவர் ‘யூடி­யூப்’பில் வலம்­வ­ரு­கி­றார். இப்­படி சினிமா பிர­ப­லங்­கள் மட்­டு­மல்­ல­மால் சின்­னத்­திரை கலை­ஞர்­களும் தங்­கள் பங்­குக்­குப் புகுந்து விளை­யா­டு­கின்­ற­னர்.

இசை­யால் அசத்­தும் ஷ்ருதி

ஷ்ருதி சொந்­த­மாக ஆங்­கி­லத்­தில் பாடல்­கள் எழுதி இசை­ய­மைத்து வெளி­யி­டு­கி­றார். சினி­மா­வுக்கு நடிப்பு, ‘யூடி­யூப்’புக்கு இசை என்று தனித்­த­னியே திற­மையை வெளிப்­ப­டுத்தி வரு­ப­வ­ருக்கு நல்ல வர­வேற்பு கிடைக்­கிறது.

“எப்­போ­துமே ரசி­கர்­க­ளு­டன் நேர­டித் தொடர்­பில் இருப்­ப­தில்­தான் எனக்கு விருப்­பம். அத­னால்­தான் சமூக வலைத்­த­ளங்­களில் தீவி­ர­மாக இயங்­கு­கி­றேன். ‘யூடி­யூப்’பில் எனது உண்­மை­யான படைப்­பு­களை காண முடி­யும். இந்­தப் பய­ண­மும் மகிழ்ச்சி தரு­கிறது,” என்­கி­றார் ஷ்ருதி.

மனோ­பா­லா­வின் ‘வேஸ்ட் பேப்பர்’

இயக்­கு­நர் மனோ­பாலா ‘வேஸ்ட் பேப்­பர்’ என்ற சேனல் நடத்­து­கி­றார்.

“வாழ்க்­கை­யில் எதை­யுமே வேஸ்ட் (பய­னற்­றது) என்று சொல்­லக்­கூ­டாது. அனைத்­துமே பயன்­த­ரக்­கூ­டி­ய­வை­தான். குப்­பை­யில்­கூட கோமே­த­கம் கிடைக்­கும். அத­னால்­தான் இப்­ப­டி­யொரு பெயர் வைத்­தேன்.

“ஒன்­றரை ஆண்­டு­க­ளா­கவே ‘யூடி­யூப்’ சேனல் தொடங்க வேண்­டும் என்று எனக்கு விருப்­பம். இத் துறை­யில் சாதித்த­வர்­க­ளைக் கவ­னித்­தேன். என்­ பலம் சினிமா. அத­னால் சினி­மா­வையே தலைப்­பா­கக் கொண்டு நான் சேனல் தொடங்கி ஓராண்டு ஆகிறது. அதற்­குள் இரண்­டரை லட்­சம் உறுப்­பி­னர்­கள் சேர்ந்­துள்­ள­னர்.

“சித்ரா லட்­சு­ம­ணன் மூன்­றரை ஆண்­டு­க­ளுக்கு முன்பு சேனல் தொடங்­கி­னார். அவ­ருக்கு மூன்­றரை லட்­சம் உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். சினி­மா­வில் நடிப்­ப­தால் என் முகத்தை அடை­யா­ளம் கண்டு­ நிறைய பேர் என் சேன­லைப் பார்க்­கி­றார்­கள்.

“‘யூடி­யூப்’ மூலம் மேலும் பிர­ப­ல­மா­வ­து­டன் வரு­மா­ன­மும் கிடைக்­கிறது. இனி சினி­மா­வில் மட்­டும் கவ­னம் செலுத்­தா­மல் சமை­யல் கலை உள்­ளிட்ட மற்ற விஷ­யங்­கள் குறித்­தும் பேசு­வ­தற்­குத் தனித்­தனி சேனல்­கள் தொடங்­குவேன்,” என்­கி­றார் மனோ­பாலா.

‘இனி தீவிரமாக இயங்குவேன்’

‘சென்னை-28’ படத்­தின் நாய­கி­யும் இயக்­கு­நர் அகத்­தி­ய­னின் மக­ளு­மான விஜ­ய­லட்­சுமி ‘இட்ஸ் விஜி’ (it’s VG ) என்ற பெய­ரில் சேனல் தொடங்கி உள்­ளார். இது இவ­ரது நீண்ட நாள் விருப்­ப­மாம். ஊர­டங்­கின்­போ­து­தான் சேனல் தொடங்­க முடிந்ததாம்.

“கார்­கள் என்­றால் எனக்கு ரொம்­பப் பிரி­யம். அத­னால் என்­னி­டம் உள்ள சிறிய ரக காரை வைத்து ‘வீல்ஸ் வித் விஜி’ என்ற பகு­தியை வெளி­யிட்­டேன். இதற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது. அடுத்­த­டுத்து வெளி­யா­கும் பகு­தி­கள் வித்­தி­யா­ச­மான தலைப்பு, கருப்­பொ­ரு­ளு­டன் இருக்­கும்.

“இதில் என் கண­வ­ரும் உதவி செய்­கி­றார். எனது காரை வைத்து எடுக்­கப்­பட்ட பகு­திக்கு முழு ஆலோ­ச­னை­யும் அவர் கொடுத்­த­து­தான்,” என்று சொல்­லும் விஜி­யும் அவ­ரது கண­வர் ஃபெரோஸும் ஊர­டங்­கின்­போது ஒரு வீட்­டுக்­குள் நடக்­கும் சம்­ப­வங்­களை வைத்து ஒரு திகில் நிறைந்த குறும்­ப­டத்தை எடுத்து பதி­விட்­டுள்­ள­னர். இதற்­கும் பலத்த வர­வேற்பு கிடைத்­த­தால் முன்­னை­விட இத்­த­ளத்­தில் தீவி­ர­மாக இயங்க முடிவு செய்­துள்­ள­ன­ராம்.

தக­வல் பகி­ரும் பாடகி

‘தனி ஒரு­வன்’ படத்­தில் ‘கண்­ணால கண்­ணால’, ‘உத்­தம வில்­லன்’ படத்­தில் ‘காத­லாம் கட­வுள்’ உள்­ளிட்ட வெற்­றிப் பாடல்­க­ளைப் பாடிய பத்­ம­ல­தா­வும் இப்­போது ‘யூடி­யூப்’ பிர­ப­லம். ஒரு பாடல் உரு­வா­கும் விதம், அதில் இடம்­பெற்­றுள்ள ராகம் ஆகி­யவை குறித்து அழ­காக விவ­ரிக்­கி­றார் பத்­ம­லதா.

அசத்­தும் ‘அம்­பானி’ சங்கர்

வடி­வே­லு­வின் நகைச்­சு­வைக் குழுவில் இணைந்து ரசி­கர்­க­ளைச் சிரிக்க வைத்­த­வர் அம்­பானி சங்­கர். ‘தர்ஸ்டி க்ரோ’ (Thirsty crow) என்ற பெய­ரில் சேனல் நடத்­தும் இவரை ஒரு லட்­சம் பேர் பின்­தொ­டர்­கின்­ற­னர். இது­வரை 64 பகு­தி­களை தனது சேன­லில் வெளி­யிட்­டுள்­ளார். இவற்­றுள் ‘அன்­னம்’ என்ற பகுதி நைஜீ­ரி­யா­வில் நடந்த விழா­வில் பரிசு பெற்­றுள்­ள­தாம்.

“சிறு கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­த­தால் என் முகம் ரசி­கர்­க­ளுக்கு தெரி­யும். ‘அம்­பா­ச­முத்­தி­ரம் அம்­பானி’யில் பெரிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­தால் நன்கு பிர­ப­ல­மா­னேன். அதன்­பி­றகு எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் கிடைக்­க­வில்லை. எனவே என்னை மாற்­றிக்­கொள்ள வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது,” என்று சொல்­லும் அம்­பானி சங்­கர் பாக்­ய­ரா­ஜின் கதை விவா­தக் குழு­வில் பணி­யாற்றி உள்­ளா­ராம்.

“அந்த அனு­ப­வத்­தில் சில இயக்­கு­நர்­க­ளின் கதை விவா­தத்­தில் பங்­கேற்­றேன். பிறகு ‘யூடி­யூப்’ சேனல் துவங்­கும் எண்­ணம் ஏற்­பட்­டது. தயா­ரிப்­பா­ளர்­களை அணுக வச­தி­யாக இருக்­கும் என்று எண்­ணித் தொடங்­கிய சேனல் இப்­போது வேகமாக வளர்­கிறது. நகைச்­சு­வைப் பகு­தி­களை உரு­வாக்­கு­கி­றேன். அடுத்து இணை­யத் தொடர்­களை இயக்­கும் திட்­டம் உள்­ளது,” என்­கி­றார் அம்­பானி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!