சிலையை கைப்பற்ற நடக்கும் போராட்டத்தை விவரிக்கும் கதை

சிலையை கைப்பற்ற நடக்கும் போராட்டத்தை விவரிக்கும் கதை

1 mins read
6ad4f76a-cf9f-4da3-9ab3-94d93944c55c
படம்: ஊடகம் -

பாலா அரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி'. இது எதிர்மறை நகைச்சுவைப் படமாக உருவாகிறது.

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை.

பலர் இந்தச் சிலையை தேடிக்கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது.

இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, பல திடீர் திருப்பங்களுக்குப் பிறகு அவர்கள் அச்சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதை சுவாரசியமாக விவரித்துள்ளோம் என்கிறார் இயக்குநர்.