'என் கதைக்கேற்ற நாயகி'

'என் கதைக்கேற்ற நாயகி'

1 mins read
bf1b6048-2794-4955-bf35-5a3f3bf28958
படம்: ஊடகம் -

ஸ்ரேயா சரண் நடிக்­கும் புதிய படத்­துக்கு 'கம­னம்' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர். சுஜனா ராவ் இந்­தப் படத்தை இயக்­கு­கி­றார்.

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு ஸ்ரே­யாவை அதிக படங்­களில் காண­மு­டி­ய­வில்லை. இந்­நி­லை­யில் ஊர­டங்­கின்­போது கிடைத்த நீண்ட ஓய்வு மீண்­டும் திரைப்­ப­டங்­களில் முழுக்­க­வ­னத்­தைத் திருப்­பு­மாறு தூண்­டி­யுள்­ள­தாம். இத­னால் பல மொழி­க­ளி­லும் நடிக்­கத் தயா­ராகி வரு­கி­றார்.

ஊர­டங்­கின்­போது பல­வி­த­மான கதை­க­ளைக் கேட்டு அவற்­றுள் சில­வற்­றில் நடிப்­பது என முடி­வெ­டுத்­துள்­ளார். 'கம­னம்' படத்­தின் பாதி வேலை­கள் முடிந்­து­விட்­ட­தாம்.

"நிஜ வாழ்­வின் யதார்த்­தங்­க­ளை­யும் இயல்­பான நிகழ்­வு­க­ளை­யும் கலந்து உரு­வாக்­கப்­பட்ட கதை இது. அத­னால் ரசி­கர்­க­ளால் தங்­களை இந்­தக் கதை­யு­டன் மிக எளி­தில் பொருத்­திக்கொள்ள முடி­யும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலை­யா­ளம், கன்­ன­டம் என ஒரே சம­யத்­தில் பல மொழி­களில் உரு­வா­கிறது.

"கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளாக தென்­னிந்­தி­யத் திரை­யு­ல­கில் தனது வசீகர முகத்­தா­லும் காந்­தப் பார்வை கொண்ட கண்­க­ளா­லும் ரசி­கர்களைக் கவர்ந்­த­வர் ஸ்ரேயா. தனது தனித்­து­வ­மிக்க நடிப்­பால் முன்­னணி நடி­கை­யா­கத் திகழ்ந்து வரு­கி­றார். இந்­தக் கதைக்கு அவர் மிகப் பொருத்­த­மாக இருப்­பார். கதை எழு­தும்­போதே அவர்­தான் நாயகி என்­பதை முடிவு செய்­து­விட்­டோம்," என்­கி­றார் இயக்­கு­நர் சுஜனா ராவ்.

இப்­ப­டத்­தின் முதல் தோற்ற சுவ­ரொட்டி ஸ்ரே­யா­வின் பிறந்­த­நா­ளை­யொட்டி அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்­டது. இளை­ய­ராஜா இசை­ய­மைக்க, பிர­பல எழுத்­தா­ளர் சாலை மாதவ் வச­னங்­கள் எழு­தி­யுள்­ளார்.

படத்­தின் தொழில்­நுட்­பப் பணி­க­ளை­யும் இப்­போதே தொடங்கி விட்­ட­னர். எனவே ஊர­டங்கு முடி­வுக்கு வந்த கையோடு 'கம­னம்' திரை­கா­ணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.