புது படங்கள்; புது தகவல்கள்

படப்­பி­டிப்­பு­கள் துவங்­கி­ய­தை­ய­டுத்து கோடம்­பாக்­கத்­தில் வழக்­க­மான பர­ப­ரப்­பும் சல­ச­லப்­பு­களும் நில­வு­கின்­றன.

புது வாய்ப்­பு­க­ளைத் தேடிப் பிடிப்­ப­தில் கலை­ஞர்­கள் முனைப்­பாக உள்­ள­னர். அந்த வகை­யில் சில நடி­கர், நடி­கை­யர் ஒப்­பந்­த­மாகி உள்ள புதுப்­ப­டங்­கள் குறித்த விவ­ரங்­க­ளைப் பார்ப்­போம்.

‘எனை நோக்­கிப் பாயும் தோட்டா’ மூலம் தமி­ழில் அறி­மு­க­மான மேகா ஆகாஷ் அடுத்து அசோக் செல்­வ­னு­டன் இணைந்து நடிக்­கி­றார். அசோக் செல்­வன் நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான ‘ஓ மை கட­வுளே’ நல்ல வர­வேற்­பைப் பெற்­றது. இதை­ய­டுத்து அறி­முக இயக்­கு­நர் ஸ்வா­தினி எழு­தி­யி­ருக்­கும் புதுப்­ப­டத்­தில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

இதில்­தான் மேகா ஆகா­சும் இணைந்­துள்­ளார். படத்­துக்கு இன்­னும் தலைப்பு வைக்­க­வில்லை. அடுத்த மாதம் படப்­பி­டிப்பு துவங்­கு­கிறது. ஸ்வா­தினி இதற்கு முன்பு சுசீந்­தி­ர­னி­டம் இணை இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­யுள்­ளார்.

‘96’ படத்­தில் சிறு வயது திரி­ஷா­வாக நடித்த கௌரி கிஷன், தற்­போது ‘மாஸ்­டர்’ படத்­தி­லும் நடித்­துள்­ளார். மலை­யா­ளத்­தில் நாய­கி­யாக நடிக்­கு­ம­ள­வுக்கு முன்­னேறி உள்­ளா­ராம். ‘அனுக்­கி­ர­ஹீ­தன் ஆன்­டணி’ என்ற மலை­யா­ளப் படத்­தில் இவர்­தான் நாயகி. இப்­ப­டம் விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது. இதற்­கி­டையே விளம்­ப­ரப் படம் ஒன்­றில் சமந்­தா­வு­டன் இணைந்து நடித்­துள்­ளார் கௌரி கிஷன்.

சினிமா வாய்ப்­பு­கள் திருப்தி அளிக்­கா­த­தால் அர­சி­யல் பக்­கம் கவ­னம் செலுத்­தி­னார் நமீதா.

முத­லில் அதி­முக, பிறகு பாஜக என்று செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் நமீ­தா­வுக்கு திடீ­ரென புது வாய்ப்­பு­கள் தேடி­வ­ரு­கின்­ற­ன­வாம். ஆனால் அவற்­றில் பெரும்­பா­லா­னவை இணை­யத் தொடர்­கள் என்­ப­தால் சற்றே தயங்­கி­யுள்­ளார்.

எனி­னும் இணை­யத்­தொ­டர்­கள்­தான் எதிர்­கா­லம் என்று நெருக்­க­மா­ன­வர்­கள் அறி­வுரை கூறவே வரி­சை­யாக கதை­க­ளைக் கேட்டு வரு­கி­றா­ராம். விரை­வில் இவர் நடிக்க உள்ள திரைப்­ப­டங்­கள், இணை­யத் தொடர்­கள் குறித்த அறி­விப்­பு­கள் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­க­லாம்.

சித்­தார்த், ஆண்ட்­ரியா இணைந்து நடித்த ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ், அடுத்து நயன்­தா­ராவை வைத்து ‘நெற்­றிக்­கண்’ படத்தை இயக்கி ­வ­ரு­கி­றார். படப்­பி­டிப்பு இன்­னும் ஒரு சில நாள்­கள் மீத­மி­ருக்­கி­ற­தாம்.

இந்­நி­லை­யில், ராணா­வி­டம் கற்பனை நிறைந்த திகில் கதை ஒன்றை சொல்லி பாராட்டு பெற்றுள்ளார். இந்தக் கதையில் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்ட ராணா, நாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரை சிபாரிசு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி­களில் இப்படம் உரு­வா­கு­மாம். இதில் நடிகர் ஸ்ரீகாந்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!