12 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கூட்டணி

1 mins read
1f665353-2a39-4f00-a81b-8a3d441b362d
படம்: ஊடகம் -

ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், அவரை வைத்து 'ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

இதில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வசந்த பாலன் படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதில் அவருக்கு இணை அபர்ணதி.

முக்கிய கதாபாத்திரங்க ளில் 'பள்ளிப்பருவத்திலே' படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், 'பசங்க' பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.