சுடச் சுடச் செய்திகள்

கமல் நடிக்கும் ‘எவனென்று நினைத்தாய்’

அஜித், விஜய் இரு­வ­ரும் நடிக்­கும் அடுத்த படம் குறித்து இன்­னும் அதி­கா­ரபூர்வ அறி­விப்பு வெளி­யா­க­வில்லை. ஆனால், இவர்­க­ளை­யும் ரஜி­னி­யை­யும் இவ்­வி­ஷ­யத்­தில் முந்­தி­விட்­டார் கமல்­ஹா­சன்.

அடுத்து லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் கமல் நடிக்­கும் படம் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கி­ உள்­ளது. படத்­துக்கு ‘எவ­னென்று நினைத்­தாய்’ என்று தலைப்பு வைத்­துள்­ள­னர்.

‘மாந­க­ரம்’, ‘கைதி’, ‘மாஸ்­டர்’ என மூன்று படங்­களை இயக்­கி­யுள்­ளார் லோகேஷ் கன­க­ராஜ்.

இவர் கூறிய கதை­யைக் கேட்ட கமல்­ஹா­சன், தன்­னு­டன் ரஜி­னி­யும் இணைந்­தால் நன்­றாக இருக்­கும் எனக் கரு­தி­னா­ராம். இதை­ய­டுத்து அவ­ருக்­கும் கதை சொல்­லப்­பட்­டது. ரஜி­னி­யும் இதில் நடிப்­ப­தாக உடனே ஒப்­புக்­கொண்­டா­ராம்.

ஆனால், கொரோனா விவ­கா­ரம் எல்­லா­வற்­றை­யும் புரட்­டிப் போட்­டு­விட்­டது. இத­னால் ரஜினி­யின் கால்­ஷீட் கிடைக்­க­வில்லை. கமல் மட்­டுமே தனித்­துக் களமிறங்கி உள்ளார்.

இது முழுக்க முழுக்க கிரா­மத்­துப் பின்னணியைக் கொண்ட சண்­டை­கள் நிறைந்த கதை­யாம். தென் தமிழகத்­தில் படப்­பி­டிப்பை நடத்த உள்­ள­னர். கதை, திரைக்­கதை, வச­னம், இயக்­கம் எல்­லாமே லோகேஷ்­தான்.

கம­லின் ஜோடி யார் என்­பன உள்­ளிட்ட அறி­விப்­பு­கள் விரைவில் வெளி­யா­கு­மாம். இதில் ரஜினி நடிப்­ப­தாக இருந்த வேடத்­தில்­தான் கமல் நடிக்­கி­றார். எனவே கமல் நடிப்­ப­தாக இருந்த சிறு கதா­பாத்­தி­ரத்­தில் யார் நடிப்­பார் எனும் கேள்வி எழுந்­துள்­ளது. அநே­க­மாக இதற்­கான விடை விஜய் சேது­ப­தி­யாக இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon