அறிவியல் தாக்கத்தை விவரிக்க வருகிறது 'கேக்காது'

அறிவியல் தாக்கத்தை விவரிக்க வருகிறது 'கேக்காது'

1 mins read
511dcc0a-3af1-4f41-a6a1-cb7fa71354a4
படம்: ஊடகம் -

'கேக்காது' படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ரோஜர் டேனி.

சாகர், சாயாதேவி ஜோடி சேரும் இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரதாப் போத்தன், மனோபாலா, ஏ.எல்.அழகப்பன், மயில்சாமி, வையாபுரி, நெல்லை சிவா ஆகியோரும் உள்ளனர்.

"வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படும் அறிவியல் வருங்காலத்தில் 'சிப்' வடிவில் மனித உடலுக்குள் புகுந்து ஆட்டுவிக்கப் போகிறது.

இதற்கான வேலைகள் ஒரு நாட்டில் ரகசியமாக நடக்கிறது. இதை கதாநாயகன் கண்டுபிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை இப்படம் விவரிக்கும்," என்கிறார் இயக்குநர்.