‘நயன்தாரா வழியில் நடைபோடுகிறேன்’

குறை கூறு­ப­வர்­க­ளை­யும் எதிர்­ம­றை­யா­கப் பேசு­ப­வர்­க­ளை­யும் அறவே கண்­டு­கொள்­ளக்­கூ­டாது என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

இந்த விஷ­யத்­தில் அவர் நயன்­தா­ரா­வைத்­தான் பின்­பற்­று­கி­றா­ராம்.

சினி­மா­வில் நடிக்க வந்த புதி­தில் இவர் அளித்த ஒரு பேட்­டி­யை­யும் அண்­மை­யில் இவர் வெளி­யிட்ட காணொளி ஒன்­றை­யும் ஒப்­பிட்டு பல­ரும் பல­வி­த­மா­கக் கேள்வி எழுப்பி வரு­கி­றார்­கள். சிலர் கிண்­ட­லும் செய்­கி­றார்­கள்.

இது­கு­றித்து ஏன் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை என்று சிலர் கேட்­கி­றார்­க­ளாம். ஆனால் தமக்கு அதில் விருப்­ப­மில்லை என்­கி­றார் ஐஸ்­வர்யா. தனது இந்த முடி­வுக்­கான கார­ணத்­தை­யும் அவர் விளக்­கு­கி­றார்.

“ஒரு விஷ­யத்­துக்­குப் பதில் சொல்ல வேண்­டு­மா­னால், வாழ்க்கை முழு­வ­தும் பதில் சொல்­லிக்­கொண்­டே­தான் இருக்­க­வேண்­டும். ஏனெ­னில் இங்கு அவ்­வ­ளவு கேள்­வி­கள் உள்­ளன.

“அண்­மைய காணொ­ளி­யில் எனது வாழ்க்­கைப் பய­ணத்தை எவ்­வ­ளவு எளி­மை­யாக சுருக்­க­மா­கச் சொல்ல முடி­யுமோ அப்­படி சொல்­லி­யி­ருந்­தேன். சென்­னை­யில் உள்ள சைதாப்­பேட்டை பகு­தி­யில்­தான் நான் நடித்த ‘காக்கா முட்டை’ படத்­தின் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன.

“ஆனால், அதே பகு­தி­யில் நான் வேறு இடத்­தில்­தான் வசித்­தேன்.

“அங்­குள்ள எளி­மை­யான மக்­க­ளின் வாழ்க்கை குறித்து நிஜ­மா­கவே எனக்கு அதி­கம் தெரி­யாது. எட்டு வயது முதல் வீட்டு வசதி வாரி­யக் குடி­யி­ருப்­பில்­தான் வளர்ந்­தேன். அந்த வய­தில் சுற்­றி­யி­ருக்­கும் மக்­க­ளைப் பற்றி அப்­ப­டி­என்ன புரிந்­து­வி­டும்? அண்­மைய காணொ­ளி­யில் இது­கு­றித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசி­ய­தைத்­தான் சிலர் விமர்­சித்­துள்­ள­னர். அவர்­க­ளுக்­குப் பதில் சொல்ல நான் தயா­ராக இல்லை,” என்று திட்­ட­வட்­ட­மா­கப் பேசு­கி­றார் ஐஸ்­வர்யா.

தமது வாழக்­கை­யில் நடந்த விஷ­யங்­களை மாற்­றிப் பேச­வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று குறிப்­பி­டு­ப­வர், யாரு­ட­னும் சம­ர­சம் செய்­து­கொள்ள வேண்­டிய தேவை­யும் தற்­போது தமக்கு எழ­வில்லை என்­கி­றார்.

“ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்பு எனது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து கொண்­டி­ருந்­தால் பிற­ரது இரக்­கத்­தைச் சம்­பா­திக்க முயற்சி செய்­வ­தாக பேசப்­பட்­டி­ருக்­கும். ஒரு விஷ­யத்­தைச்­சொல்­வ­தற்கு நேர­மும் இட­மும் மிக­வும் முக்­கி­யம். அது எனக்­குத் தெரி­யும். நான் மிக­வும் தெளி­வாக யோசித்­துச் செயல்­ப­டக்­கூ­டிய பெண். கிண்­டல் செய்­ப­வர்­கள் அதைச் செய்து கொண்­டே­தான் இருப்­பார்­கள்,” என்­கி­றார் ஐஸ்­வர்யா.

பிரச்­சி­னை­கள் இல்­லாத வாழ்க்­கையே இல்லை என்று குறிப்­பி­டு­ப­வர், நேர்­ம­றை­யான சிந்­த­னை­கள்­தான் வாழ்க்­கை­யின் அடுத்த கட்­டத்­துக்­குச் செல்ல கைகொ­டுக்­கும் என்­கி­றார். இந்த தன்­னம்­பிக்­கை­யு­டன் கூடிய அணு­கு­மு­றையை தான் நயன்­தா­ரா­வி­டம் கண்­ட­தா­க­வும் சுட்­டிக் காட்­டு­கி­றார்.

“கிண்­டல் செய்­ப­வர்­க­ளைப் பற்றி நயன்­தாரா ஒரு­முறை மிகத்­தெ­ளி­வா­கப் பேசி­யி­ருந்­தார். ‘நம்மை தரக்­கு­றை­வாக விமர்­சிப்­ப­வர்­கள் அதே இடத்­தில்­தான் இருப்­பார்­கள். ஆனால், நாம் அவர்­க­ளைக் கடந்து பெரிய இடத்­துக்கு போய்க்­கொண்டே இருப்­போம்’ என்­றார் நயன்­தாரா. அது­தான் உண்மை.

“நம்­மைப் பற்றி எதிர்­ம­றை­யா­கப் பேசு­வோர் இருக்­க­லாம். அவர்­க­ளைப் பார்த்து சிரித்­த­படி நம் வழி­யில் செல்­ல­வேண்­டும். அது­தான் நல்­லது,” என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!