விஜய்க்காக காத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன்

தாம் இயக்­கும் படங்­க­ளைப் போலவே இயக்­கு­நர் வெற்­றி­மாறனும் வித்­தி­யா­ச­மான மனி­த­ரா­கத்­தான் இருக்­கி­றார்.

திரைத்­து­றை­யில் 13 ஆண்­டு­களைக் கடந்­தி­ருப்­ப­வர் இது­வரை ஐந்து படங்­கள்­தான் இயக்­கி­யுள்­ளார். ஐந்­தும் வெற்­றிப் படைப்­பு­கள்.

இந்­நி­லை­யில் அடுத்­த­டுத்து நான்கு படங்­களை இயக்க ஒப்­புக்­கொண்­டுள்­ளார் வெற்றி. சூரி நடிப்­பில் ஒரு படம், சூர்­யாவை வைத்து ஒரு படம், அதற்­க­டுத்து விஜய் நடிப்­பில் ஒரு படம், பின்னர் தயா­ரிப்­பா­ளர் எல்­ரெட் குமார் தயா­ரிக்­கும் படம்.

‘அசு­ரன்’ படத்­துக்­குப் பிறகு ஒரே சம­யத்­தில் பல படங்­களில் கவ­னம் செலுத்­தும் அள­வுக்­குத் தமக்கு தைரி­யம் வந்­து­விட்­ட­தா­கத் தோன்­று­கிறது என்று சொல்லி சிரிக்­கும் வெற்­றி­மா­றன், ஓராண்டுக்­குள் ஒரு திரைப்­ப­டத்தை முழு­மை­யாக உரு­வாக்­கி­விட முடி­யும் என்­ப­தைத் தாமே தொடக்­கத்­தில் நம்­ப­வில்லை என்­கி­றார்.

“என்­னை­யும் அறி­யா­மல் அனைத்­துப் பணி­க­ளை­யும் வேக­மா­கச் செய்ய ஆரம்­பித்­தேன். அதற்­குள் கொரோனா விவ­கா­ரம் பெரி­தா­கி­விட்­டது. ஊர­டங்­கின்­போது அடுத்து என்ன செய்­யப் போகி­றோம் என்­பது குறித்த ஒரு தெளிவே இல்லை. அவ்­வப்­போது மன­தில் வெவ்­வேறு எண்­ணங்­கள் தோன்றி மறைந்­தன.

“கிரு­மித்­தொற்­றில் இருந்து நம்­மைக் காப்­பாற்­று­வ­தற்­கான தடுப்­பூசி இன்­னும் தயா­ரா­க­வில்லை என்­ப­தால் படப்­பி­டிப்­புக்­குத் தைரி­ய­மாக போக­ மு­டி­யுமா என்­பது தெரி­ய­வில்லை. அனைத்­தை­யும்­விட எனக்குள் ஒரு தெளிவு ஏற்­பட்டால்­தான் எந்­தப் படத்தை எவ்­வ­ளவு வேக­மாக முடிக்க இய­லும் என்­பது தெரி­ய­வ­ரும்.

“எது எப்­ப­டி­யாக இருந்­தா­லும் முத­லில் எல்­ரெட் குமா­ரின் படம், அதன்­பி­றகு தாணு சார் தயா­ரிப்­பில் சூர்­யா­வு­டன் ‘வாடி­வா­சல்’ படத்­தில் இணை­கி­றேன். பின்­னர் விஜய் சாரின் அழைப்­புக்­காக காத்­தி­ருக்­கப் போகி­றேன். இவற்­றுக்கு மத்­தி­யில் சூரி படம் என்று மேலோட்­ட­மாக ஒரு திட்­டம் வகுத்­தி­ருக்­கி­றேன்,” என்­கி­றார் வெற்­றி­மா­றன்.

‘அசு­ரன்’ படத்­துக்கு அர­சி­யல் ரீதி­யில் விமர்­ச­னங்­கள், பாராட்­டு­கள், கண்­ட­னங்­கள் என எல்­லாம் ஒரு­சேர கிளம்­பின. எனவே அடுத்­த­டுத்த படங்­களில் காட்சி அமைப்­பில் சில சம­ர­சங்­கள் இருக்­குமா என்று கேட்­டால், ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று வெற்­றி­யி­டம் இருந்து திட்­ட­வட்­ட­மான பதில் வரு­கிறது.

“ஒரு குறிப்­பிட்ட பின்­பு­லம் நமக்கு கதை­யைக் கொடுக்­கும். அந்­தக் கதையை நாம் சரி­யா­கச் சொல்­ல­வேண்­டும். சில கதை­களில் குறிப்­பிட்ட மக்­களை மையப்­படுத்தித்­தான் அனைத்­தை­யும் சொல்­ல­ வேண்டியிருக்­கும். எனவே, அதற்கு ஆத­ரவு, எதிர்ப்பு, விமர்­சனங்­கள், பாராட்­டு­கள் என மாறி மாறி வந்த வண்­ணம் இருக்­கும். அதற்­காக நாம் செய்­யக்­கூ­டிய விஷ­யங்­களை நிறுத்திவிடக் கூடாது,” என்று சொல்­ப­வர் ‘அசுரன்’ படம் மன­த­ள­வில் தமக்கு தைரி­யம் கொடுத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

வேடந்­தாங்­கல் அருகே கட்­டி­யாம்­பந்­தல் என்ற கிரா­மத்­தில் பசு­மைப் பண்ணை அமைத்­தி­ருக்­கி­றார் வெற்றி. அங்கு சுமார் 600 பந்­த­யப் புறாக்­களை வளர்க்­கி­றார். இவ­ரது புறாக்­கள் உல­க­ள­வில் நடக்­கும் பல்­வேறு போட்­டி­களிலும் பங்­கேற்று பரி­சு­கள் பெற்­றுள்­ளன. இயற்கை விவ­சா­யத்­தில் மிகுந்த ஆர்­வ­முள்­ள­வர் வெற்றி. வேடந்­தாங்­கல் பண்­ணை­யில் இயற்கை விவ­சா­யத்­தைச் செயல்­ப­டுத்தி உள்­ளார்.

“விஜய் சாருக்­காக காத்­தி­ருப்­ப­தில் எந்த நஷ்­ட­மும் இல்லை. அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்ற ஆர்­வ­மாக உள்­ளேன். அவ­ருக்­கான கதையை நன்­றாக மெரு­கேற்­றத் திட்­ட­மிட்­டுள்­ளேன்.

“ஊரடங்கு வேளையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,” என்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!