‘அன்பு நெகிழ வைக்கிறது’

தனது 34ஆவது வய­தில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கி­றார் பிரியா ஆனந்த். சாக்­லெட் விளம்­ப­ரம் மூலம் திரைக்கு வந்த இந்­தத் தாரகை தனது திரைப் பய­ணம் இனிப்­பாக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

“நான் ‘வாம­னன்’ படம் மூலம் சினி­மா­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கி­விட்­டது. நான் சினிமாவில் நடிக்கத் துவங்கிய புதிதில் அறி­மு­க­மான நடி­கை­களில் பலர் இப்­போது திரைத்­து­றை­யில் இல்லை.

“ஆனால், பத்­தாண்­டு­க­ளாக நடித்­து­வ­ரும் எனக்கு ரசி­கர்­கள் தரும் ஆத­ரவு நெகிழ வைக்­கிறது. அதி­லும், திரைத்­து­றைப் பின்­னணி இல்­லாத குடும்­பத்­தி­லி­ருந்து திரைக்கு வந்த நான் இப்­போ­தும் நடித்­துக்­கொண்­டி­ருப்­பது பெரு­மை­யாக இருக்­கிறது,” என்­கி­றார் பிரியா.

அஜித், விஜய், (சூர்­யா­வு­டன் விளம்­ப­ரத்­தில் நடித்­து­விட்­டார்) போன்ற தமிழ் சினி­மா­வின் முன்­னணி கதா­நா­ய­கர்­க­ளின் ஜோடி­யாக நடிக்­காத நிலை­யில், சினி­மா­வில் தனக்கு ரசி­கர்­க­ளின் ஆத­ரவு இருப்­ப­தாக பிரியா சொல்­வது சரியா?

“இரண்டு வருட இடை­வெ­ளிக்­குப்­பின் ‘எல்.கே.ஜி.’ படத்­தில் நடித்­தேன். படம் பார்க்க திரை­ய­ரங்­கிற்­குச் சென்­ற­போது ரசி­கர்­க­ளி­டம் இருந்து எனக்­குக் கிடைத்த வர­வேற்பு நெகி­ழ­வைத்­து­விட்­டது. பெரிய நடி­கர்­க­ளு­டன் நடித்­தால் மட்­டுமே கிடைக்­கக்­கூ­டிய வர­வேற்பை ‘எல்.கே.ஜி.’ படம் தந்­தது.

“அத­னால்­தான் எல்­லோ­ரும் ரசிக்­கு­ம்படி­யான, குறிப்­பாக குடும்ப ரசி­கர்­கள் ரசிப்­பது மாதி­ரி­யான கதை­க­ளைத் தேர்வு செய்து நடிக்க ஆர்­வம் காட்டி வரு­கி­றேன்.

“விரை­வில் சிவா­வு­டன் நான் நடித்த நகைச்­சு­வைப் பட­மான ‘சுமோ’ வெளி­யாக இருக்­கிறது. அதன்­பின் கன்­ன­டத்­தில் ஒரு படம் நடிக்க உள்­ளேன்,” என்­கி­றார் பிரியா.

அடுத்த தீபா­வளி தமக்கு தலைத் தீபா­வ­ளி­யாக இருக்­க­லாம் என கடந்த ஆண்டே பிரியா கூறி இருந்­தார். இப்­போது பிர­பல இளம் கதா­நா­ய­க­னு­டன் இணைத்து பேசப்­ப­டு­கி­றார்.

“அதர்­வா­வு­ட­னும், கௌதம் கார்த்­திக்­கு­ட­னும் அவ்­வப்­போது என்னை இணைத்து கிசு­கி­சுக்­கள் வரு­கின்­றன. அதில் உண்­மை­யில்லை. அவர்­கள் இரு­வ­ரும் எனக்கு நல்ல நண்­பர்­கள். நானும் அவர்­க­ளுக்கு இது­வரை நல்ல தோழி­யா­கவே இருக்­கி­றேன்.”

வாரிசு நட்­சத்­தி­ரங்­க­ளின் ஆதிக்­கம் குறித்து இப்­போது பர­ப­ரப்­பா­கப் பேசப்­ப­டு­கிறது. பிரியா என்ன சொல்­கி­றார்?

“அர­சி­யல் மற்­றும் தொழில்­து­றை­யில் வாரி­சு­கள் வரும்­போது, திரைத்­து­றை­யில் மட்­டும் வரக்­கூ­டாதா? அப்­படி வந்­தா­லும் திறமை இருந்­தால்­தானே வெற்­றி­பெற முடி­யும்? அதே சம­யம் சினிமா பின்­னணி இல்­லா­மல் வரும் நட்­சத்­தி­ரங்­க­ளின் வளர்ச்­சியை தடுக்க நினைக்­கக்­கூடாது.”

தமிழ் சினிமா உல­கம் பற்றி கருத்து?

“மலை­யாள சினி­மா­வில் நிறைய எழுத்­தா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். தமி­ழில் அந்­த­ள­வுக்கு இல்லை. அதே­ச­ம­யம், தமிழ் சினிமா தொழில்­நுட்­பக் கலை­ஞர்­க­ளுக்கு பாலி­வுட் உட்­பட சென்ற இட­மெல்­லாம் சிறப்பு கிடைக்­கிறது.”

ஊர­டங்கு நேர­மிது. பிறந்­த­நாளை எப்­படி கொண்­டா­டி­னீர்­கள்?

“நான் ஹைத­ரா­பாத்­தில் என் பாட்­டி­யு­டன் தங்­கி­யுள்­ளேன். பாட்­டியை குளிப்­பாட்­டு­வது, சோறூட்­டு­வது, மருந்து தரு­வது என குழந்­தை­யைப் போல் அவ­ரைக் கவ­னித்­துக்­கொள்­வ­தில் பொழுது சுக­மாக கரைகிறது.

“எனக்கு கணினி சார்ந்த விளை­யாட்டு உள்­ளிட்ட பொழு­து­போக்­கு­களில் விருப்­பம் எப்­போ­தும் இல்லை. ஆனால் நிறைய புத்­த­கங்­கள் படிப்­பேன்.

பிரி­யா­வின் பிறந்­த­நாள் செய்தி?

“என்னை என்­னி­டம் இருந்து மறைக்க முடி­யாது... மற்­ற­வர்­கள் எப்­போ­துமே காண முடி­யா­த­தை­யும் என்­னால் காண முடி­யும்.

“மற்­ற­வர்­கள் எப்­போ­துமே அறிய முடி­யா­த­தை­யும் நான் அறி­வேன். என்­னை நானே முட்­டா­ளாக்க மாட்­டேன்.

“என்ன நடந்­தா­லும் எனது சுய­ம­ரி­யா­தை­யை­யும் மன­சாட்­சி­யை­யும் இழக்க மாட்­டேன்,” என அமெ­ரிக்க கவி­ஞர் எட்­கர் ஏ.கெஸ்ட் எழு­திய ‘மைசெல்ஃப்’ என்­கிற கவி­தை­யில் இருந்து மேற்­கண்ட வரி­களை தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் கோடிட்­டுக் காட்டி, தாம் எப்­ப­டிப்­பட்­ட­வர் என்­பதை பிறந்­த­நாள் செய்­தி­யா­கச் சொல்லி இருக்­கி­றார் பிரியா.

மேலும், ரசி­கர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

“இந்த வாழ்க்கை எனக்­குப் பல நல்ல விஷ­யங்­க­ளைத் தந்­துள்­ளது. வாழ்க்­கைப் பாதை­யில் கடந்து வந்த ஒவ்­வோர் ஆண்­டும் பல நல்ல அனு­ப­வங்­க­ளைத் தந்­துள்­ளன. பொது­வாக நான் பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டு­ப­வள் அல்ல. எனி­னும் நன்றி தெரி­விப்­பது கடமை.

“வருத்­தமே தெரி­விக்­காத ஒரு­வரை மன்­னிப்­ப­து­தான் மிகக் கடி­ன­மான விஷ­யம் என்­ப­தைக் கற்­றுள்­ளேன்,” என்­கி­றார் பிரியா ஆனந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!