‘தனிமையை நேசிப்பேன்’

சென்னை வரும்­போது எப்­ப­டி­யும் தனது தந்தை கம­ல்­ஹா­சனை சந்­தித்­துப் பேசி­வி­டு­வா­ராம் ஷ்ரு­தி­ஹா­சன்.

ஆனா­லும் தந்­தை­யு­டன் தங்­கா­மல் வேறோர் இடத்­தில் தனி­யா­கத்­தான் இருப்­பா­ராம். கார­ணம், தனி­மையைத் தாம் மிக­வும் நேசிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

“தனி­யாக இருந்­தால் போர­டிக்­கும் என்ற எண்­ணம் பல­ருக்கு இருக்­கிறது. உங்­க­ளுக்கு நீங்­களே போர­டிக்­கி­றீர்­கள் என்­றால் மற்­ற­வர்­க­ளுக்­கும் அப்­ப­டித்­தானே இருப்­பீர்­கள்,” என்று சிரித்­துக்­கொண்டே கேள்வி எழுப்பி குறும்­பா­கக் கண்­ண­டிக்­கி­றார்.

இந்த ஊர­டங்கு வேளை­யில் தம்­மைத் தாமே நேசிக்க கற்­றுக் கொண்­டா­ராம். மேலும் சமை­யல் செய்­வது, வீட்­டைச் சுத்­தப்­ப­டுத்­து­வது, துணி துவைப்­பது என்று அனைத்து வேலை­க­ளை­யும் தாமே செய்­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

பிர­ப­லங்­கள் எல்­லாம் இப்­படி வீட்டு வேலை­க­ளைச் செய்­வார்­களா என்று சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் ஆச்­ச­ரி­யத்­து­டன் கேள்வி எழுப்­பு­வது தமக்கு வியப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கச் சொல்­கி­றார் ஷ்ருதி.

கார­ணம் லண்­ட­னில் தங்­கி­யி­ருந்­த­போது குப்­பை­களை வெளியே கொண்­டு­போய்க் கொட்­டு­வது முதல் சமை­யல் செய்து பாத்­தி­ரங்­களைச் சுத்­தப்­ப­டுத்­து­வது வரை அனைத்து வேலை­க­ளை­யும் இவரே தனித்­துச் செய்­வா­ராம்.

“வீடு சுத்­த­மாக இல்லை என்­றால் எனக்கு மூளை வேலை செய்­யாது. பல­ரு­டன் தொலை­பே­சி­யில் பேச வேண்­டும், நண்­பர்­க­ளைச் சந்­திக்க வேண்­டும், பல திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்த வேண்­டும் என நம் அனை­வ­ருக்­கும் ஏகப்­பட்ட அழுத்­தங்­கள் உள்­ளன.

“இதன் கார­ண­மா­கவே தனி­யாக இருப்பது சில­ருக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­துகிறது என்பது எனது கணிப்பு. ஆனால் நான் பல ஆண்­டு­க­ளா­கத் தனித்து வாழ்ந்து பழ­கி­ய­வள். அத­னால் எனக்கு எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை. இப்­போது மட்­டு­மல்ல, நான் எப்­போ­துமே தனி­மையை நேசிப்­பேன்,” என்­கி­றார் ஷ்ருதி.

ஊர­டங்­கின்­போது இணை­யம் வழி சிலர் ‘பாத்­தி­ரங்­கள் கழு­வும் சவால்’ என்று தக­வல் அனுப்­பி­ன­ராம். ஆனால் பாத்­தி­ரம் கழு­வு­வ­தும் வீட்­டைப் பெருக்­கிச் சுத்­தம் செய்­வ­தும் சவால் அல்ல என்று குறிப்­பி­டு­ப­வர், வீட்­டைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்­பது நமது பொறுப்பு என்­கி­றார்.

“இப்­ப­டியே போனால், ‘பல் தேய்க்­க­லாம் வாருங்­கள்’ என்று சவால் விடுத்­தா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை,” என்று சொல்­லிச் சிரிப்­ப­வர் ஊர­டங்­கால் குடும்­பத்­து­டன் இணைந்­தி­ருக்க முடி­ய­வில்லை எனும் வருத்­த­மும் தமக்கு இருப்­ப­தா­கச் சொல்­கி­றார். எனி­னும் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யால் இந்த இடை­வெளி ஓர­ளவு குறைந்­தி­ருப்­ப­தாக உண­ரத் தூண்­டு­கி­ற­தாம்.

“உண்­மை­யில் எனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளைப் பார்க்க முடி­ய­வில்லை, நேரில் சந்­தித்­துப் பேச­மு­டி­ய­வில்லை என்ற வருத்­தம் உள்­ளது. தக­வல் தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யால் காணொளி மூலம் அனை­வ­ரை­யும் பார்க்­க­வும் பேச­வும் முடி­கிறது. இந்த நிலை மாற­வேண்­டும். அதி­லும் விரை­வாக மாற­வேண்­டும் என்­பது எனது விருப்­பம்.

“சினி­மா­வி­லும் கூட தினக்­கூலி தொழி­லா­ளர்­கள் அதி­கம் உள்­ள­னர். அவர்­க­ளின் வாழ்க்கை நிலை­யைப் பார்க்­கும்­போது மிக­வும் பரி­தா­ப­மாக உள்­ளது. இயல்பு வாழ்க்கை விரை­வில் திரும்பி, எல்­லாம் சரி­யாகி அனை­வ­ருக்­கும் நல்­லது நடக்­க­வேண்­டும். இது­மட்­டுமே தற்­போது எனது பிரார்த்­த­னை­யாக இருக்­கிறது,” என்­கி­றார் ஷ்ருதி.

தந்தை கமலின் அர­சி­யல் பிர­வே­சம், அவர் நடிக்­கும் படங்­கள் குறித்து கருத்து தெரி­விப்­ப­தையோ, தக­வல்­கள் பகிர்ந்து கொள்­வ­தையோ ஷ்ருதி தவிர்த்து வரு­வ­தா­கத் தக­வல். இப்­போ­துள்ள சூழ்­நி­லை­யில் இவை குறித்­துப் பேசு­வதை விரும்­ப­வில்­லை­யாம்.

“எனது கவ­னம் முழு­வ­தும் அடுத்­த­டுத்து இசைத்­தொ­குப்­பு­களை வெளி­யி­டு­வ­தில்­தான் உள்­ளது. வேறு விஷ­யங்­களில் என் கவ­னம் சித­றிப்­போ­வதை விரும்­ப­வில்லை,” என்­கி­றார் ஷ்ருதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!