நகுல்: முன்பெல்லாம் பெண்களுக்குப் பிடித்த மாதிரி பழகத் தெரியாது

“மரம் சும்மா இருந்­தா­லும் காற்று விடு­வ­தில்லை என்­பது பழைய மொழி. மனம் சும்மா இருந்­தா­லும் காதல் விடு­வ­தில்லை என்­பது புது­மொழி,” என்று கவி­தை­யா­கப் பேசத் துவங்­கு­கி­றார் ‘பாய்ஸ்’ நகுல்.

அண்­மை­யில் ஒரு பெண் குழந்­தைக்கு தந்­தை­யாகி உள்­ளார். வாயைத்­ தி­றந்­தால் ஒரே மகள் புரா­ண­மாக இருக்­கிறது.

“இப்­போ­தெல்­லாம் அவர் என்­னைக் கண்­டு­கொள்­வதே இல்லை. மகள் அகிரா மீது­தான் அவ­ரது முழுக் கவ­ன­மும் உள்­ளது,” என்று சிரிக்­கி­றார் திரு­மதி ஸ்‌ருதி நகுல்.

“பள்­ளிப் பரு­வத்­தில் மும்­பை­யில் இருந்து வந்து சென்­னை­யில் குடி­யே­றி­ய­போது யாரி­ட­மும் அதி­கம் பேச­மாட்­டேன். பெண்­க­ளுக்­குப் பிடித்த மாதிரி பழ­கு­வது எப்­படி என்றே தெரி­யாது.

“வெளிப்­ப­டை­யா­கச் சொன்­னால், காதல் என்­றால் என்னவென்று தெரி­யாது,” என்­கி­றார் நகுல்.

சென்­னை­யில் உள்ள நண்­பர் வீட்­டுக்கு அடிக்­க­டி செல்­வா­ராம். நண்­ப­ரது பக்­கத்து வீட்­டில் குடி­யி­ருந்­த­வர்­தான் ஸ்‌ருதி.

“பள்ளி நேரம் முடிந்­த­தும் கூட்­டாளி வீட்­டுக்­குச் செல்­வேன். அவ­ரது அம்மா பேச்­சில் அடிக்­கடி ஸ்‌ருதி­யின் பெயர் வந்­து­போ­கும்.

“ஒரு­முறை வீட்­டி­லி­ருந்த கேக் ஒன்றை சாப்­பிட்­ட­போது, மிக­வும் சுவை­யாக இருப்­ப­தாக நான் பாராட்ட, ‘இதைச் செய்­தது ஸ்ரு­தி­தான்’ என்­றார் நண்­ப­ரின் தாய். ஸ்‌ரு­தி­யின் தொலை­பேசி எண்­க­ளைப் பெற்று, அவ­ரைப் பாராட்டி தக­வல் அனுப்­பி­னேன். அன்­று­தான் எங்­கள் வாழ்­வின் இன்­னிசை துவங்­கி­யது,” என்­கி­றார் நகுல்.

ஸ்‌ரு­தி­யு­டன் பழ­கத் துவங்­கும் முன்பே ‘பாய்ஸ்’ படத்­தில் நடித்து முடித்­து­விட்­டா­ராம். எடுத்த எடுப்­பி­லேயே காதல் வயப்­ப­டா­மல், முத­லில் நட்பு பாராட்டி, நிறைய பேசி, ஒரு­வ­ரை­யொ­ரு­வர் புரிந்­து­கொண்டு இரு­வ­ரும் காத­லிக்­கத் தொடங்­கி­ய­தா­கச் சொல்­கி­றார்.

“என்­னைப் போன்­ற­வர்­க­ளுக்கு தேவைப்­படும் ஆத­ரவு, பேரன்பு, ஆறு­தல், எல்­லாமே ஒரே பெண்­ணி­டம் இருந்து கிடைத்­தால் எவ்­வ­ளவு நன்­றாக இருக்­கும். எனக்கு வாழ்க்கை அப்­ப­டித்­தான் அமைந்­தது.

“ஸ்‌ருதி மிக நன்­றா­கப் பேசு­வார். கண்­ணில் எப்­போ­தும் ஒரு­வித தெளிவு இருக்­கும். பார்க்க அழ­கா­க­வும் இருந்­தார்.

“திரு­வி­ழா­விற்­குப் போனால் சாமி கும்­பி­டு­வ­தை­விட அங்கு வந்து நிற்­கும் சின்­னக் குழந்­தை­க­ளைக் கொஞ்­சும் ஆள் நான். ஸ்ரு­தி­யின் குடும்­பத்­தா­ரும் மிக­வும் நல்­ல­வர்­கள்.

“என்னை விட­வும் ஸ்ருதி உய­ரம் கொஞ்­சம் அதி­கம். நான் அவங்­களை நிமிர்ந்து பார்த்து பேசு­வதே எனக்­குப் பிடிக்­கும். அத­னால் காத­லில் அச்­சம், குழப்­பம், தடு­மாற்­றம் எதற்­கும் இடம் கிடை­யாது என்ற முடி­வுக்கு வந்­தேன்,” என்­கி­றார் நகுல்.

பிற­கென்ன... சினி­மா­வில் வரும் பர­ப­ரப்­பான காட்­சி­யைப் போல், ஸ்ரு­தி­யி­டம் சொல்­லா­ம­லேயே அவ­ரது வீட்­டுக்கு திடீ­ரென்று போனா­ராம்.

அங்கே காத­லி­யின் பெற்­றோ­ரி­டம், “உங்­கள் மகளை திரு­ம­ணம் செய்­து­கொள்ள விரும்­பு­கி­றேன்,” என்று விஷ­யத்­தைப் போட்டு உடைத்­தா­ராம்.

“ஸ்‌ரு­தி­யின் பெற்­றோர் காது­கொ­டுத்து கேட்­ட­னர். எனது அன்பை வார்த்­தை­கள் வழி­யாக விவ­ரிக்க முயன்­றேன். உண்­மை­யாக இருந்­த­தால் அது அவர்­க­ளைச் சென்­ற­டைந்­தது,” என்று நகுல் சொல்­வதை முழு­மை­யாக ஆமோ­திக்­கி­றார் ஸ்ருதி.

எப்­போ­தும் எல்­லோ­ரி­ட­மும் ஒரே மாதிரி பேசிப் ­ப­ழ­கு­வ­து­தான் தமது கண­வ­ரி­டம் மிக­வும் பிடித்த விஷ­யம் என்­கி­றார் ஸ்ருதி.

வீட்­டில், வெளி­யில், நண்­பர்­க­ளோடு என எங்­கே­யும் இயல்­பான நகு­லைத்­தான் பார்க்க முடி­யும் என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார்.

“இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு அவ­ரது அம்­மா­வும் அதற்கும் முன்­னரே அவ­ரது தந்­தை­யும் கால­மா­கி­விட்­ட­னர். அந்­தச் சோகத்­தில் இருந்து அவரை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர மிக­வும் சிர­ம­மாக இருந்­தது.

“இப்­போது மகள் அகிரா பிறந்­த­பி­றகு மகள் பின்­னா­ல் சுற்­றி வரு­கி­றார். அகிரா எப்போ தூங்­கு­வாள், எப்­போது எங்­க­ளோடு விளை­யா­டு­வாள் என்­பது அவ­ருக்கு மட்­டுமே தெரிந்த ரக­சி­யம்.

“அவர் கையில் ரத்­த­மும் சதை­யு­மாக சின்ன அழு­கை­யோடு, அகி­ரா­வைத் தூக்­கிக்­கொ­டுத்­த­போது நகுல் கண்­ணில் நிம்­ம­தி­யைப் பார்த்­தேன்,” என்­று நெகிழ்ந்து போகிறார் ஸ்ருதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!