உண்மை சம்பவங்களுடன் உருவாகிறது 'அடங்காதே'

உண்மை சம்பவங்களுடன் உருவாகிறது 'அடங்காதே'

1 mins read
dde9eca8-bb29-4b3d-a49a-da8868eca3e2
-

அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அடங்காதே'. சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங் கள் படத்தில் இடம்பெற்றுள்ளன வாம். "இதன் மூலம் இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்துகிறோம். சரத்குமார் அரசியல் கட்சித் தலைவராகவும் ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதி ஒருவர் நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் பாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலிஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள் ளார்," என்கிறார் இயக்குநர்.