மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதை

ஆன்ட்­ரியா நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள புதுப்­ப­டம் ‘நோ என்ட்ரி‘.

உல­கில் அதிக மழைப்­பொ­ழி­வைக் கொண்­டுள்ள சிர­புஞ்சி பகு­தி­யில் முக்­கிய காட்­சி­க­ளைப் பட­மாக்கி உள்­ள­னர். அழகு கார்த்­திக் இயக்­கி­யுள்­ளார்.

இவர் எஸ்.ஏ. சந்­தி­ர­சே­க­ர­னி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். இளம் தம்­ப­தி­யர் மலைப்­பி­ர­தே­சத்­தில் எதிர்­கொள்­ளும் ஆபத்­து­கள்­தான் படத்­தின் கதை­யாம்.

“மனித நட­மாட்­டம் இல்­லாத ஒரு மலைப்­பி­ர­தே­சத்­தில் ஒரு சொகு­சான இடத்­தில் இளம் தம்­ப­தி­யர் தங்­கு­கி­றார்­கள். அங்கே மனி­தர்­களை வேட்­டை­யா­டும் நாய்­க­ளி­டம் அவர்­கள் சிக்க நேரி­டு­கிறது.

“அத்­த­கைய 10 நாய்­கள் சேர்ந்­தால் ஒரு யானை­யையே கொன்றுவிடும் அள­வுக்­குக் கொடூ­ர­மா­னவை. நர வேட்­டை­யா­டும் நாய்­க­ளி­டம் இருந்து அந்த இளம் ஜோடி தப்­பி­யதா என்­பதை திகி­லா­க­வும் விறு­வி­றுப்­பா­க­வும் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளோம்,” என்­கி­றார் இயக்­கு­நர் அழகு கார்த்­திக்.

நாய்­க­ளு­டன் போரா­டும் காட்­சி­களில் ஆன்ட்­ரியா கொஞ்­ச­மும் பய­மின்றி தைரி­ய­மாக நடித்­தா­ராம். இப்­ப­டத்­துக்­காக 15 நாய்­க­ளுக்கு சிறப்­புப் பயிற்சி அளிக்­கப்­பட்­ட­தாம்.

ஆதவ் கண்­ண­தா­சன், ‘வாகா’ படத்­தின் நாயகி ரண்யா, ஜெய­ஸ்ரீ, சதீஷ், டில்லி, கோகுல் உள்­ளிட்­டோ­ரும் நடித்­தி­ருக்­கி­றார்­கள்.

“இது­வரை தமிழ் சினிமா காணாத ஆபத்­தான மலைப்­பி­ர­தே­சங்­க­ளை­யும் பசு­மைக் காட்டு வெளி­க­ளை­யும் இப்­ப­டத்­தில் காட்­டி­யுள்­ளோம். உல­கி­லேயே அதி­க­மாக மழை பெய்­யும் இடம் சிர­புஞ்சி. மேகா­லயா மாநி­லத்­தில் உள்ள இந்த ஊரில்­தான் 45 நாட்­கள் எங்­கள் படக்­குழு தங்­கி­யி­ருந்­தது.

“படத்­தில் இடம்­பெ­றும் கிரா­பிக்ஸ் காட்­சி­கள் உல­கத் தரத்­தில் இருக்­கும்,” என்­கி­றார் இயக்­கு­நர் அழகு கார்த்­திக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!