சுடச் சுடச் செய்திகள்

அரசியல் தலைவராக உருவெடுக்கும் சூர்யா

அர­சி­யல் குறித்து சூர்யா நேர­டி­யாக கருத்து தெரி­விப்­ப­தில்லை. ஆனால் அண்­மைக்­கா­ல­மாக அவர் தெரி­விக்­கும் சில கருத்­து­கள் அரசி­யல் ஆக்­கப்­ப­டு­வ­தாக ஒரு பேச்சு எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் நடி­கர் பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளார் சூர்யா. இது அவ­ரது அர­சி­யல் பிர­வே­சத்­துக்­கான முதல் அடி என்று பேசப்­ப­டு­வ­தால் பர­ப­ரப்பு எழுந்­துள்­ளது.

தற்­போது மூன்று படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் சூர்யா. சுதா கொங்­கரா இயக்­கத்­தில் அவர் நடித்து முடித்­துள்ள ‘சூர­ரைப் போற்று’ படம் அக்­டோ­பர் 30ல் வெளி­யீடு காண உள்­ளது.

இதை­ய­டுத்து தனது 39வது பட­மாக ஹரி இயக்­கத்­தில் ‘அருவா’வில் நடிப்­ப­தாக இருந்­தார் சூர்யா. ஆனால் என்ன கார­ணத்­தாலோ அப்­ப­டம் குறித்த அறி­விப்பு­கள் எது­வும் வெளி­யா­க­வில்லை.

இந்­நி­லை­யில் இணை­யம் வழி நேர­டி­யாக படங்­களை வெளி­யி­டு­வதற்கு ஹரி எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளார். எனவே இரு­வ­ரும் இப்­போ­தைக்­குக் கூட்­டணி அமைக்க வாய்ப்­பில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் சூர்யா நடிக்­கும் படத்­துக்கு ‘வாடி­வா­சல்’ எனத் தலைப்பு வைத்­துள்­ள­னர். ஆனால், இப்­ப­டத்தை தொடங்கு­வ­தற்கு முன்பு ஏற்­கெ­னவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்­படி தயா­ரிப்­பா­ளர் எல்­ரெட் குமா­ருக்கு ஒரு படத்தை இயக்கித்­ தரவேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளார் வெற்றி­மா­றன்.

எனவே, இடைப்­பட்ட நேரத்­தில் வேறொரு படத்­தில் நடித்து முடித்து­வி­ட­லாம் என்­பதே சூர்யா போட்­டுள்ள கணக்கு. இதை­ய­டுத்­து­தான் ‘பசங்க’ பாண்­டி­ராஜ் சொன்ன கதை­யில் நடிக்க சம்­ம­தித்­துள்­ளா­ராம்.

தமது ‘அக­ரம்’ அறக்­கட்­டளை மூலம் ஏரா­ள­மான ஏழை மாண­வர்­க­ளின் கல்­விக்கு உதவி வரு­கி­றார் சூர்யா. அவ­ரது இந்த உண்­மை­யான குணத்­தை­யும் செயல்­பாடு­க­ளை­யும் திரை­யில் காட்­டும் வகை­யில் கதைக்­க­ளத்தை அமைத்­துள்­ளா­ராம் பாண்­டி­ராஜ்.

இது­போன்ற கதை­யில் சூர்யா இது­வரை நடித்­த­தில்லை என்­ப­து­டன் ஓர் அர­சி­யல் தலை­வ­ரா­க­வும் திரை­யில் தோன்ற உள்­ளா­ராம். அது­மட்­டு­மல்ல, மிகக் குறு­கிய காலத்­தில் இப்­ப­டத்தை எடுத்­து­விட முடி­யும் என பாண்­டி­ராஜ் உறுதி அளித்­துள்­ள­தா­கத் தக­வல்.

ஜன­வ­ரிக்­குள் இப்­ப­டத்தை முடித்து­விட்­டால் ‘வாடி­வா­சல்’ படப்­பி­டிப்­புக்­குத் தயா­ராகிவிட­லாம் என்­பதே சூர்யா போட்­டு­ள்ள கணக்கு என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.

இதற்­கி­டையே ‘கூட்­டத்­தில் ஒருத்­தன்’ படத்தை இயக்­கிய ஞான­வேல் இயக்­கத்­தில் நடிக்­க­வும் சூர்யா திட்­ட­மிட்­டுள்­ளார். இதில் முதன்­மு­றை­யாக நீதி­பதி கதா­பாத்தி­ரத்தை ஏற்க உள்­ளார்.

ஞான­வேல் சொன்ன கதை மிக­வும் பிடித்­துப்போன­தால் சூர்­யாவே இப்­ப­டத்­தைத் தயா­ரிக்க முன்­வந்­தி­ருக்­கி­றா­ராம்.

இத்­த­கைய தக­வல்­க­ளால் அவ­ரது ரசி­கர்­கள் மிகுந்த உற்­சா­கத்­தில் உள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon