'வீட்டைச் சுத்தம் செய்தாலே உடல் இளைக்கலாம்'

'வீட்டைச் சுத்தம் செய்தாலே உடல் இளைக்கலாம்'

1 mins read
aa5db5a8-a2e2-4655-a7db-7ebe59bf2f45
-

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்

தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலி. இவரின் திரைப்பயணத்தில் 'கற்றது தமிழ்', 'அங்காடி தெரு', 'கலகலப்பு', 'எங்கேயும் எப்போதும்' உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தன.

இந்நிலையில் தற்பொழுது கொரோனா ஊரடங்கில் பட வேலை ஏதுமில்லாததால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஞ்சலி சமூக வலைத்தளத்தில் முழு நேரத்தையும் செலவிட்டு அடிக்கடி எதையேனும் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்தவகையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. படத்தில் அவர் உடல் இளைத்து காணப்பட்டார்.

அதைப் பார்த்த அவரின் ரசிகர்கள், "34 வயதாகுது. ஆனால், 15 வயசு பொண்ணு மாதிரி இருக்கிறீர்களே," என்று கேட்டனர்.

"ஊரடங்கு நேரத்தில் உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்துகொண்டே உடற்பயிற்சி செய்தேன். அத்துடன் சமையலறையைச் சுத்தம் செய்தாலே அது பெரிய உடற்

பயிற்சி. அப்படித்தான் நான் இந்த ஊரடங்கில் வீட்டைச் சுத்தம் செய்து இப்படி இளைத்துப்போனேன்," என்று கூறி அதற்கான காணொளி ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

இவர் முழு நீள நகைச்சுவைப் படத்தில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடிக்க இருக்கிறார். சென்னை, ஊட்டி மற்றும் மற்ற மலைப்பாங்கான பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்கு மொத்தமாக 45 நாட்களுக்கள் படத்தையெடுத்து முடிக்க முடிவு செய்துள்ளது படக்குழு.