மாஸ்டரைக் கொண்டாடும் ரசிகர்கள்

கொரோனா பாதிப்பால் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படமும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும் வெளியீட்டுக்காகக் காத்திருந்தன.

இந்நிலையில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படாது என்ற முடிவுக்கு வந்த சூர்யா அவருடைய படத்தை ‘ஓடிடி’ இணையத்தளத்தில் இம்மாதம் 30ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துவிட்டார்.

அவரைத் தொடர்ந்து விஜய் நடித்திருந்த ‘மாஸ்டர்’ படத்திற்கும் இதே நிலைதான் என்று கூறப்பட்டது. இவ்வேளையில் திடீரென்று அக்டோபர் மாதம் 15ஆம் தேதி திரை அரங்குகள் திறக்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்ததைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’ திரையரங்கில்தான் வெளியாகும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் படம் திரையரங்கில் வெளியாகும் நாளுக்காக விஜய்யின் ரசிகர்கள் அதிரடிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள். முடங்கிக் கிடக்கும் திரையுலகைத் தூக்கி நிறுத்தும் ஆயுதமாக ‘மாஸ்டர்’ திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!