'தேசிய விருது கிடைத்தால்தான் திருமணம்'

'தேசிய விருது கிடைத்தால்தான் திருமணம்'

2 mins read
2f72192b-ccc1-4c18-b016-93fa7950d511
படம்: தமிழக ஊடகம் -

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அது தவிர ரஜினியுடன் 'அண்ணாத்த' படத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலிப்பதும் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் திருமணத்தை பொறுத்தவரை நயன்தாரா புது முடிவு எடுத்துள்ளார். நயன்தாராவுக்கு முன்பே 'அறம்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தாலும் அவருக்கு இன்னும் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை.

நடிகை நயன்தாரா, தேசிய விருது வாங்கிய பிறகுதான், திருமணம் என உறுதியாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதற்கான கதையோடு பலரும் நயன்தாராவின், 'கால்ஷீட்'டுக்காக காத்திருக்க துவங்கி உள்ளனர்.

சமீபத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனின் அம்மாவைச் சந்தித்திருந்தார். இவர்கள் இருவரின் திருமணத்தை இந்த ஆண்டே நடத்திவிடவேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருந்தாராம் விக்னேஷ் சிவனின் அம்மா.

ஆனால், நயன்தாரா இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு படங்களில் நடிக்க வரிசையாக ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம். இது விக்னேஷ் சிவனின் தாயாருக்கு பெரும் வருத்தத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா தேசிய விருது கிடைத்த பிறகுதான்

திருமணம் என்ற செய்தியைக் கேட்டு இவர் எப்போது தேசிய விருது வாங்குவார்? எப்போது

என் மகனைத் திருமணம் செய்துகொள்வார்? என்று புலம்பத் தொடங்கி இருப்பதாகக் கூறப்

படுகிறது.