தீபாவளி பந்தயத்தில் முதலில் களமிறங்கும் அம்மன்

நடிகை நயன்­தாரா நடித்­துள்ள

‘மூக்­குத்தி அம்­மன்’ திரைப்­ப­டம் வரு­கிற தீபா­வளி பண்­டிகை அன்று வெளி­யி­டப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அக்­டோ­பர் 15ஆம் தேதி முதல் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் திரை­ய­ரங்கு

களைத் திறந்துகொள்ள மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது. 50 விழுக்­காடு இருக்­கை­க­ளுக்கு மட்­டும் அனு­ம­தித்­தா­லும் அத­னால் பெரிய பாதிப்பு எது­வு­மில்லை. சனி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளைத் தவிர பெரும்­பா­லான நாட்­களில் 50 விழுக்­காட்­டிற்­குக் குறை­வான ரசி­கர்­கள்­தான் திரை­ய­ரங்­கு­க­ளுக்கு வரு­கி­றார்­கள்.

50 விழுக்­காட்டு இருக்­கை­கள் என்­றா­லும் படம் ஓடும் நாட்­கள் இத­னால் அதி­க­மாக வாய்ப்­புள்­ளது. எனவே, அத­னால் பெரிய பாதிப்பு வரப்­போ­வ­தில்லை. படத்தை எப்­ப­டி­யும் பெரிய திரை­யில் பார்க்க வேண்­டும் என்­று­தான் ரசி­கர்­கள் விரும்­பு­வார்­கள்.

மத்­திய அரசு அனு­மதி அளித்து­விட்­டா­லும் தமி­ழக அரசு இன்­னும் திரை­ய­ரங்­கு­க­ளைத் திறக்க அனு­மதி அளிக்­க­வில்லை. அத­னால் விரக்­தி­யில் இருக்­கி­றார்­கள் படத் தயாரிப்பா­ளர்­கள். சூர்யா போன்ற ஒரு முன்­னணி நாய­க­னின் படமே பெரிய திரை­யில் வெளி­யா­கா­மல் ‘ஓடிடி’யில் நேர­டி­யாக வெளி­யாக உள்­ள­தால், மற்­ற­வர்­களும் தங்­கள் படங்­களை ‘ஓடிடி’யில் வெளி­யிட முன்­வந்­துள்­ள­னர். தயா­ரிப்­பா­ளர்­களும் இதற்கு பெரும் ஆத­ரவு தரு­வ­தால் மேலும் பல படங்­கள் ‘ஓடிடி’ தளங்­களில் வரி­சை­கட்ட ஆரம்­பித்­துள்­ளன.

அதன்­படி, ஏற்­கெனவே ‘பொன்­

ம­கள் வந்­தாள்’, ‘பென்கு­யின்’, ‘டேனி’, ‘லாக்­கப்’, ‘சைலன்ஸ்’, ‘க/பெ ரண­சிங்­கம்’ உள்­ளிட்ட படங்­கள் ‘ஓடிடி’யில் வந்­தன.

அடுத்­த­தாக சூர்­யா­வின் ‘சூர­ரைப் போற்று’ திரைப்­ப­டம் வரு­கிற அக்­டோ­பர் 30ஆம் தேதி ‘ஓடிடி’யில் வெளி­யா­கும் என்று அறி­வித்து உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நடிகை நயன்­தாரா நடிப்­பில் உரு­வாகி இருக்­கும் ‘மூக்­குத்தி அம்­மன்’ பட­மும் தீபா­வளி அன்று ‘ஹாட்­விண்­மீன் ஓடிடி’ தளத்­தில் வெளி­யிட உள்­ள­தாக அறி­வித்து உள்­ள­னர்.

இப்­ப­டத்­தின் இயக்­கு­நர்­க­ளுள் ஒரு­வ­ரான ஆர்.ஜே.பாலாஜி, ‘ஐபி­எல்’ போட்­டி­க­ளுக்கு வர்­ணனை செய்து வந்­தார். அப்­போது படத்­தின் விளம்­ப­ரப் பணி­கள் இருப்­ப­தால் அடுத்த 20 நாட்­கள் வர்­ணனை செய்­யப் போவது இல்லை என்று கூறி சென்­னை திரும்­பி­னார்.

அப்­போ­து­தான் இந்­தப் படம் ‘ஓடிடி’ தளத்­திற்கு நல்ல விலைக்கு கைமாற்­றப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது. தற்­பொ­ழுது படம் தீபா­வளி அன்று வெளி­யி­டப்­படும் என்று அதி­கா­ர பூர்­வ­மாக அறிவித்துள்ளனர்.

நகைச்­சுவைப் பட­மாக உரு­வாகி உள்ள இப்­ப­டத்­திற்­காக நயன்­தாரா, 48 நாட்­கள் விர­தம் இருந்து நடித்­துள்­ளார். முழுக்­க­தை­யும் அவர் மீது பய­ணிப்­ப­து­போல திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­ப­டத்­திற்கு கதை, திரைக்­கதை, வச­னம் எழு­தி­யுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்­கு­நர் என்.ஜே.சர­வ­ண­னு­டன் இணைந்து இயக்கி உள்­ளார். ‘வேல்ஸ் பிலிம் இண்­டர்­நே­ஷ­னல்’ சார்­பில் ஐசரி கே.கணேஷ் இப்­ப­டத்தை தயா­ரித்­துள்­ளார்.

தீபா­வ­ளிக்குத் திரை­ய­ரங்­கு­க­ளுக்­குச் சென்று படம் பார்த்து ரசித்த காலம் போய் தற்­போது வீட்­டில் இருந்­த­ப­டியே ‘ஓடிடி’யில் பார்க்க வேண்­டி­யி­ருக்­கிறது. எல்­லாம் இந்த கொரோனா செய்த காரி­யம் என்று சினிமா ரசி­கர்­கள் நொந்துகொண்­டி­ருக்­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!