4ஆம் ஆண்டில் காலடி வைக்கும் தம்பதி

தெலுங்­கில் ‘ஏ மாய சேசவே’ படத்­தில் சேர்ந்து நடித்த நாக­சை­தன்யா, சமந்தா பின்­னர் நிஜ­வாழ்­வி­லும் காத­லித்து திரு­ம­ணம் செய்து கொண்­டார்­கள். 2017ஆம் ஆண்டு இரு­வ­ருக்­கும் திரு­ம­ணம் நடை­பெற்­றது.

திரு­ம­ணத்­திற்­குப் பின்­னும் நடிப்­பைக் கைவி­டா­மல் நடித்து வரு­கி­றார் சமந்தா. அவ்­வப்­போது அவர் கர்ப்­பம் என வழக்­கம்­போல வதந்­தி­கள் வந்­தா­லும் அதை­யெல்­லாம் சமந்தா கண்­டு­கொள்­வ­தில்லை.

அக்­டோ­பர் 6ஆம் தேதி தங்­க­ளது மூன்­றா­மாண்டு திரு­மண விழாவைக் கொண்­டா­டி­னார்­கள். அதை முன்­னிட்டு சமந்தா இன்ஸ்­ட கி­ரா­மில், தனது கண­வர் நாக­சை­தன்­யா­வுக்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

“எனக்­காக நீங்­கள், உங்­க­ளுக்­காக நான். எந்த கத­வாக இருந்­தா­லும் அதை நாம் ஒன்­றி­ணைந்து திறப்­போம், இனிய திரு­ம­ண­நாள் வாழ்த்­து­கள் கண­வரே!” எனக் குறிப்­பிட்­டுள்­ளார். இந்த ஜோடிக்கு பல திரைப் பிர­ப­லங்­களும் வாழ்த்து தெரி­வித்து வரு­கி­றார்­கள்.

‘மாயா’, ‘கேம் ஓவர்’ படங்­களை இயக்­கிய அஸ்­வின் சர­வ­ணன் இயக்­கும் அடுத்த படத்­தில் நாய­கி­யாக நடித்து வரு­கி­றார் சமந்தா. விறு­வி­றுப்­பாக நடந்து வந்த படப்­பி­டிப்பு கொரோ­னா­வால் இடை­யில் சில மாதங்­கள் நிறுத்­தப்­பட்­டது. தற்­போது தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தால் மீண்­டும் படப்­பி­டிப்பை தொடங்க படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

இந்­தப் படத்­தில் சமந்தா மாற்­றுத்­தி­ற­னா­ளி­யாக நடிப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது. ‘நானும் ரௌடி­தான்’ படத்­தில் நயன்­தாரா நடித்­தது போல காது கேட்­காத மாற்­றுத்­தி­ற­னா­ளி­யாக சமந்தா இப்­ப­டத்­தில் நடிக்­கி­றா­ராம். இதற்­காக இணை­யம் மூலம் அவர் பயிற்சி எடுத்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அரங்கம் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!