ஆதிராஜன் இயக்கத்தில் வி.ராஜா, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அருவா சண்ட'.
இது சமூக புரட்சியை கருவாக கொண்ட கதையம்சம் உள்ள படமாம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார்.
தன்னைப் போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இதுபோன்ற படங்கள் அமைவது மிகவும் அரிது என்று சரண்யா கூறியதைப் பெருமையாகக் கருதுகிறேன்," என்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.
படத்தின் கதையைக் கேட்டு முடித்த அடுத்த நிமிடமே நடிக்க ஒப்புக்கொண்டாராம் சரண்யா. அதுமட்டுமல்ல, விஜய்சேதுபதியுடன், 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை இந்த படத்தில் உணர்ந்ததாகச் சொன்னாராம்.
"பின்னணிக் குரல் பதிவின்போது அவர் தன்னையும் அறியாமல் கண்கலங்கிவிட்டார். படத்தின் இறுதிக்காட்சி அவரை கலங்க வைத்தது.
"படத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இது அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற படைப்பாக உருவாகி உள்ளது," என்கிறார் ஆதிராஜன்.
"இந்தப் படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக, கநாநாயகனாக நடித்துள்ள வி.ராஜா, மேலும் பல சமூக சிந்தனைகளை கொண்ட படங்களை தயாரித்து நடிக்க வேண்டும்," என்று வாழ்த்தி உள்ளார் சரண்யா பொன்வண்ணன்.
படம் விரைவில் வெளியாகிறது.

