அன்பால் நெகிழும் அனுஷ்கா

இரண்­டாண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு அண்­மை­யில் வெளி­யான ‘நிசப்­தம்’ படத்­தின் மூலம் தனது ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளார் அனுஷ்கா. இனி அடுத்­த­டுத்து படங்­களில் நடிக்­கப் போவ­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

‘பாகு­பலி’க்குப் பிறகு இவர் நடித்த படங்­கள் அனைத்­துமே தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் தயா­ராகி உள்­ளன. கார­ணம், இரு மொழி ரசி­கர்­க­ளை­யும் திருப்­திப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­து­தான்.

“தமி­ழில் மட்­டும் நடித்­தால் தெலுங்கு ரசி­கர்­கள் ஏமாற்­றம் அடை­வார்­கள். அத­னால்­தான் இரு­த­ரப்பு ரசி­கர்­க­ளை­யும் திருப்­திப்­ப­டுத்­தக்­கூ­டிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­கி­றேன். மேலும் எனது ரசி­கர்­கள் குறித்து நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கி­றேன்,” என்­கி­றார் அனுஷ்கா.

இவர் நடிக்­கத் தொடங்கி 15 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இந்த வெற்­றி­க­ர­மான பய­ணத்­தைத் திட்­ட­மிட்டு மேற்­கொண்­ட­தாக யாரே­னும் பாராட்­டி­னால் தமக்­குச் சிரிப்­பு­தான் வரும் என்­கி­றார். ஏனெ­னில் எந்த விஷ­யத்­தை­யும் இவர் திட்­ட­மிட்­டுக் கொள்­வ­தில்­லை­யாம்.

“இது­தான் உண்மை. கணக்கு வழக்­கு­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் விட என் இத­யம் சொல்­வதை மட்­டும் கேட்­டுச் செயல்­ப­டு­கி­றேன். என்­னைப் பொறுத்­த­வரை சினிமா என்­பது ஒரு மாயா­ஜா­லம், மாறா­க தொழில் அல்ல.

“சினி­மா­வில் உணர்வுப்பூர்­வ­மாக இரண்­ட­றக் கலந்­து­விட்­ட­தால் திரை­யில் என்­னைக் காண்­ப­தில் மட்­டுமே கவ­னம் உள்­ளது. இது­வரை சினி­மாவை ஒரு தொழி­லா­கக் கருதி அதன் நுணுக்­கங்­க­ளைப் புரிந்­து­கொள்ள முயன்­றதே இல்லை,” என்­கி­றார் அனுஷ்கா.

தாம் நடித்த படங்­க­ளை­யும் கதா­பாத்­தி­ரங்­களை­யும் ரசி­கர்­கள் தங்­க­ளு­டை­ய­தா­கக் கருது­வதா­கக் குறிப்­பி­டு­ப­வர், அத­னால்­தான் ‘அருந்­ததி’ உட்­பட தாம் நடித்த பல படங்­கள் பெரிய அள­வில் வெற்றி பெற்­ற­தா­கச் சுட்­டிக் காட்­டு­கி­றார். ரசி­கர்­கள் தந்த அந்த வெற்­றியை வேறு எத­னு­ட­னும் ஒப்­பிட முடி­யாது என்­றும் சொல்­கி­றார்.

“அந்த வெற்­றி­கள் தந்த மகிழ்ச்­சியை எவ்­வ­ளவு பணத்­தைக் கொட்­டிக் கொடுத்­தா­லும் அனு­ப­விக்க இய­லாது. ரசி­கர்­கள் என்னை நடி­கை­யா­கப் பார்ப்­ப­தில்லை. குடும்­பத்­தில் ஒரு­வ­ரா­கக் கரு­து­கி­றார்­கள்.

“இரண்­டாண்­டு­கள் திரைப்­ப­டங்­களில் என்­னைப் பார்க்­காத ரசி­கர்­கள் தினந்­தோ­றும் கடி­தங்­கள், சமூக வலைத்­த­ளப் பதி­வு­கள், தொலை­பேசி வாயி­லாக இடை­வி­டா­மல் தொடர்பு கொண்டு பேசி­னர். ஏன் நடிக்­க­வில்லை? வேறென்ன பிரச்­சினை? எப்­போது திரு­ம­ணம்? அடுத்து நடிக்­கும் படம் என்ன என்று அவர்­கள் எழுப்­பும் கேள்­வி­கள் எனக்கு எந்த வகை­யி­லும் சலிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தில்லை.

“அவர்­க­ளு­டைய இந்­தக் கேள்­வி­கள் அனைத்­துமே என்­மீது வைத்­தி­ருக்­கும் அன்­பின் வெளிப்­பாடு என உறு­தி­யாக நம்­பு­கி­றேன். ரசி­கர்­க­ளின் இந்த அன்­பு­தான் என்னை உற்­சா­கப்­ப­டுத்­து­கிறது. அவர்­க­ளின் அன்­புக்கு எப்­போ­தும் கட்­டுப்­ப­டு­வேன்,” என்று நெகிழ்­கி­றார் அனுஷ்கா.

‘நிசப்­தம்’ படத்­தில் காது­ கே­ளாத, வாய் ­பே­ச முடியாத பெண்­ணாக நடித்­தி­ருப்­ப­தற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இப்­ப­டத்­தில் நடிப்­பது என தீர்­மா­னித்­தது திரை­வாழ்க்­கை­யில் தாம் எடுத்த துணிச்­ச­லான முடிவு என்­கி­றார்.

“நடிக்க வந்த புதி­தில் வச­னங்­க­ளைப் பேசி­னால் மட்­டுமே போதும் என்று நினைத்­தி­ருந்­தேன்* அப்­ப­டிப்­பட்ட நான் வாய் பேச முடி­யாத பாத்­தி­ரத்­தில் நடித்­தது உண்­மை­யா­கவே சவால் அனு­ப­வம்­தான்.

“சின்­னச்­சின்ன முக அசை­வு­க­ளின் மூலம் பல உணர்­வு­களை வெளிப்­ப­டுத்த முடி­யும் என்­ப­தை­யும் பல பக்­கங்­க­ளுக்கு நீளும் வச­னங்­களை ஒரு கண்­ண­சை­வில் வெளிப்­ப­டுத்­தி­விட முடி­யும் என்­ப­தை­யும் நன்கு உண­ர­வைத்த படம் இது,” என்று சொல்­லும் அனுஷ்கா, தாம் அடுத்து நடிக்­க­வுள்ள படங்­கள் குறித்து சம்­பந்­தப்­பட்ட தயா­ரிப்பு நிறு­வ­னங்­களே விரை­வில் அதிகாரபூர்வ அறி­விப்­பு­களை வெளி­யி­டும் என்­கி­றார்.

புதுப்­ப­டங்­களை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டு­வதை முன்­னேற்­ற­மா­கப் பார்க்­கி­றா­ராம். இதன்­மூ­லம் திரை­யு­ல­கில் வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும் என்­கி­றார்.

“எனக்­குத் தெரிந்து நிறைய எழுத்­தா­ளர்­கள் நல்ல கதை­களை எழுதி முடித்து பத்து ஆண்டு­க­ளுக்கு மேலாக பட வாய்ப்­புக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றார்­கள். இணைய வெளி­யீடு என்­பது அவர்­க­ளுக்­கெல்­லாம் நல்­ல­தொரு தளத்தை அமைத்­து கொடுத்­துள்­ளது.

“அதே சம­யம் திரை­யரங்குகளில் கிடைக்­கும் அனு­ப­வம் அலா­தி­யா­னது என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றேன். திரை­ய­ரங்­கு­களில் கிடைக்­கும் மகிழ்ச்­சியை எதைக் கொண்­டும் ஈடு­கட்ட முடி­யாது. இப்­பி­ரச்­சி­னைக்கு சுமு­க­மான தீர்வைக் காணவேண்­டும்,” என்கிறார் அனுஷ்கா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!