நீண்டநாள் நட்பை பிரித்த பண மோசடி புகார்

நீண்டநாள் நட்பை பிரித்த பண மோசடி புகார்

1 mins read
c628631f-9c36-4edd-80de-8e8fa142a5e9
திரைப்படம் ஒன்றில் விஷ்ணு விஷால், சூரி. -

பண விவகாரத்தால் நடிகர்கள் விஷ்ணு விஷால், சூரி இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விஷ்ணுவின் தந்தை ரமேஷ் குடவாலா காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றியவர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் என்பவரும் ரமேஷ் குடவாலாவும் நிலம் வாங்கித் தருவதாகச் சொல்லியும், தாம் நடித்த ஒரு படத்துக்கு ஊதியம் தராமலும் ரூ.2.7 கோடி ஏமாற்றி விட்டனர் என்பது சூரியின் புகார்.

அவர் சொல்வது பொய் என்று விஷ்ணு விஷால் கூறுகிறார். இவரும் சூரியும் படங்களில் இணைந்து நடித்ததின் வழி நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

ஆனால், தந்தை மீது சூரி முன்வைத்துள்ள புகார் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்திருப்பதாக விஷ்ணு தெரிவித்துள்ளார்.

"உண்மையில் சூரிதான் எனது நிறுவனத்துக்குப் பணம் தரவேண்டும். கடந்த 2017ஆம் ஆண்டு 'கவரிமான்' பரம்பரை என்ற படத்துக்காக சூரிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.

சட்­டத்­தின் மீதும் நீதித்­துறை­யின் மீதும் முழு நம்­பிக்கை உள்­ள­தால் சட்­டம் அனு­ம­திக்­கும் பாதை­யில் செல்­வோம். உண்மை ஒரு­நாள் வெளி­வ­ரும்," என்று சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார் விஷ்ணு விஷால்.

மேலும் உண்­மை­யான தக­வல்­க­ளு­டன் இது பற்றி செய்தி வெளி­யிட வேண்­டும் என்று ஊட­கங்­க­ளி­டம் கேட்­டுக்கொள்­வ­தா­க­வும் எல்­லாம் தெளி­வான பிறகு சட்­டப்­படி சரி­யான நட­வ­டிக்­கை­களை தாம் மேற்­கொள்ள இருப்­ப­தா­க­வும் அவர் திட்­ட­வட்­ட­மா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.