‘இனிய நினைவுகள் மனதில் தேங்கியுள்ளன’

ரஜி­னி­யு­டன் இணைந்­துள்ள ‘அண்­ணாத்த’, குஷ்­பு­வின் நடிப்­பில் வெளி­யாக இருக்­கும் 200வது படம்.

அண்­மைக்­கா­ல­மாக இவர் அர­சி­யல் குறித்து அதி­கம் பேசு­வ­தில்லை. மாறாக சினிமா குறித்து விலா­வா­ரி­யாக, ஆர்­வத்­து­டன் பேசு­கி­றார்.

தாம் 200 படங்­களில் நடித்­தி­ருப்­ப­து­கூட குஷ்­பு­வுக்கு நினை­வில்­லை­யாம். அண்­மைய சந்­திப்­பின்­போது ஒரு செய்­தி­யா­ளர்­தான் இதை அவ­ரி­டம் தெரி­யப்­ப­டுத்தி உள்­ளார்.

“ரஜினி சாரு­டன் நடிக்­கும் இந்­தப் படம் எனது திரைப்­ப­ய­ணத்­தின் முக்­கிய மைல்­கல் என்­பது எனக்கே இன்ப அதிர்ச்­சி­யாக இருந்­தது. தந்தை கால­மா­கி­விட்ட நிலை­யில் எனது 16வது வய­தில் குடும்­பப் பொறுப்­பு­களை ஏற்­க­வேண்­டிய நிலை. அத­னால் சினிமா துறை­யில் நுழைந்து ஒரு­வித வைராக்­கி­யத்­து­டன் நடித்­தேன்.

“நீண்ட பய­ணத்­தில் பல­வி­த­மான அனு­ப­வங்­களை எதிர்­கொண்டு இன்று நல்ல குடும்­பத்­து­டன் நிம்­ம­தி­யாக ஒரு வாழ்க்கை அமைந்­துள்­ளது. பெண் குழந்­தை­க­ளுக்­குத் தாயின் அர­வ­ணைப்பு மிக­வும் முக்­கி­யம்.

“கண­வ­ரும் சினி­மா­வில் பணி­யாற்­று­வ­தால் மகள்­க­ளு­ட­னும் முழு­மை­யாக நேரத்­தைச் செல­விட நினைத்­தேன். அத­னால்­தான் ‘பெரியார்’ படத்­துக்­குப் பிறகு சினி­மா­வில் இருந்து ஒதுங்கி இருந்­தேன்,” என்­கி­றார் குஷ்பு.

அதன்­பி­றகு சின்­னத்­தி­ரை­யில் அவ்­வப்­போது பணி­யாற்றி வந்­தா­லும் இவரை நேரில் சந்­தித்த ரசி­கர்­கள் அனை­வ­ருமே மீண்­டும் சினி­மா­வில் நடிக்­க­வேண்­டும் என்று தவ­றா­மல் வலி­யு­றுத்­தி­ன­ராம்.

இந்­நி­லை­யில் ‘அண்­ணாத்த’ வாய்ப்பு தேடி­வந்­த­போது உடனே ஒப்­புக்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

“ஒரு­கா­லத்­தில் எனக்­குத் தமிழ் ரசி­கர்­கள் கோவில் கட்­டி­ய­தாக வெளி­யான செய்தி மொத்த இந்­தி­யா­வை­யும் மலைக்க வைத்­தது. மக்­கள் ஏன் இவ்­வ­ளவு அன்பு காட்­டு­கி­றார்­கள் என்று எனக்­குள் கேள்வி எழுந்­தது. அதன்­பி­றகு தமிழ் மக்­க­ளின் அன்­புக்கு நன்­றி­யு­டை­ய­வ­ளாக இருக்­கத் தீர்­மா­னித்­தேன்,” என்று சொல்­லும் குஷ்பு, பிறகு மற்ற மொழி­களில் நடிப்­ப­தைக் குறைத்­துக் கொண்­டா­ராம்.

‘சின்­னத்­தம்பி’ படம் கன்­ன­டத்­தி­லும் தெலுங்­கி­லும் மறு­ப­திப்பு செய்­யப்­பட்­ட­போது இவ­ரைத்­தான் நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்ய இருந்­த­ன­ராம். அச்­ச­ம­யம் தமி­ழில் ‘அண்­ணா­மலை’, ‘சிங்­கா­ர­வே­லன்’ பட வாய்ப்­பு­கள் தேடி வந்­த­ன­வாம்.

“நான் எந்­த­வி­தத் தயக்­க­மு­மின்றி தமி­ழுக்­குத்­தான் முன்­னு­ரிமை கொடுத்­தேன். தமிழ் சினி­மா­வைச் சேர்ந்­த­வர்­கள் என்­மீது மிகுந்த அன்பு காட்­டி­னர்.

“எனக்கு முட்டையின் மஞ்சள் கரு ரொம்பப் பிடிக்கும். விஜயகாந்த் சாருடன் நடிக்கும்போது படப்பிடிப்பு உணவு இடைவேளையில் நிறைய முட்டை வரவழைத்து வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவை எனக்குக் கொடுப்பார்.

“குஷ்புவுக்குக் காரமாகச் சாப்பிட்டால் அழுகை வந்துவிடும் என்று சொல்லி காரமில்லாத சாப்பாட்டைப் போடுங்க என்று எனக்காக சத்யராஜ் சார் ரொம்ப மெனக்கெடுவார். ‘நாட்டாமை’ படத்தின் படப்பிடிப்பின்போது ஊட்டியில் நல்ல மழை. அப்போது நான், சரத்குமார் சார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மூவரும் ஒரே காரில் உலா வந்தோம்.

“ஓரிடத்தில் சாப்பாடு வாங்கி ஒரே தட்டில் மூன்று பேரும் சாப்பிட்டோம். அந்த உணவில் அன்பு நிறைந்திருந்தது. அதுமட்டுமல்ல, ‘காதலன்’’ படத்தில் இடம்பெற்ற ‘பேட்டராப்’ பாடலுக்கு மூன்று பேரும் கொட்டும் மழையில் நடனமாடினோம். இதுபோன்ற இனிய நினைவுகள் மனதில் தேங்கியுள்ளன,” என்கிறார் குஷ்பு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!