சிறையில் மோதிக்கொண்ட நடிகைகள், தூங்க முடியவில்லையாம்

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை ராகினி தினந்தோறும் இரவில் புத்தகங்கள் படிப்பதால் அவர் அறையில் உள்ள மின்விளக்கை அணைப்பதில்லை என்றும் இதனால் தமக்கு தூக்கம் கெடுவதாகவும் சஞ்சனா புகார் எழுப்பியுள்ளார்.

இதேபோல் சஞ்சனா அதிகாலை வேளையில் யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்வதால் தனது தூக்கம் கெடுவதாக ராகினியும் புகார் தெரிவித்துள்ளார்.

ராகினி சக கைதிகளுடன் இயல்பாகப் பேசிப் பழகுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறை அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர் என்று ஊடகத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!