முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் சேதுபதி; கிளம்பியது எதிர்ப்பு

இலங்கை கிரிக்­கெட் வீரர் முத்தையா முர­ளி­த­ரன் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் விஜய் சேதுபதி நாய­க­னாக நடிக்க இருப்­ப­தாக அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பு வெளி­யாகி உள்­ளது. கூடவே இப்­ப­டத்­துக்கு கடும் எதிர்ப்­பும் கிளம்பி உள்­ளது.

முத்­தையா முர­ளி­த­ரன் இலங்கை கிரிக்­கெட் அணிக்­காக அனைத்­து­ல­கப் போட்­டி­களில் பங்­கேற்று பல சாத­னை­க­ளைப் புரிந்­த­வர். சுமார் 800 விக்­கெட்­டு­களை வீழ்த்­திய பெரு­மைக்­கு­ரி­ய­வர்.

இதைக் குறிக்­கும் வகை­யில் அவ­ரது வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­துக்கு ‘800’ என்றே தலைப்பு வைத்­துள்­ள­னர். இப்­ப­டத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்க, சாம் சி.எஸ். இசை­ய­மைக்­கி­றார்.

கடந்­தாண்டே இப்­ப­டத்­தில் விஜய் சேது­பதி நாய­க­னாக நடிப்­ப­தாக தக­வல் வெளி­யா­னது. இத­னால் ஒரு­த­ரப்­பி­னர் கடும் அதிருப்தி அடைந்­த­னர். சேது­பதி இப்­படத்­தில் நடிக்­கக்­கூ­டாது என சமூக வலைத்­த­ளத்­தில் பலர் கருத்து தெரி­வித்­த­னர்.

ஈழப் பிரச்சினையுடன் முரளிதரனைத் தொடர்புப்படுத்தி பலர் காரசாரமாக பதிவிட்டனர்.

இந்­நி­லை­யில் கொரோனா விவ­கா­ரம் தலை­தூக்­கி­யதை அடுத்து விஷ­யம் அடங்­கிப்போனது. இந்­நிலை­யில் ‘800’ படத்­தின் படப்­பிடிப்பு அடுத்­தாண்டு துவங்க இருப்­ப­தாக படக்­குழு அறி­வித்­துள்­ளது.

மிக விரை­வில் சேது­ப­தி­யு­டன் இணைந்து நடிக்­க­வுள்ள நடி­கர், நடி­கை­ய­ரின் பெயர்­க­ளை­யும் வெளி­யிட உள்­ள­னர். மேலும் ஓரிரு வாரங்­களில் படத்­தின் முதல் தோற்ற சுவ­ரொட்­டி­யும் வெளி­யாக உள்­ளது.

இப்­ப­டத்­தில் நடிக்­கக்­கூ­டாது என எதிர்ப்­பு கிளம்பி இருப்­பது தொடர்­பாக விஜய் சேது­பதி இது­வரை வாய் ­தி­றக்­க­வில்லை. எனி­னும் அவ­ரைத் திரை­யு­ல­குக்கு அறி­மு­கப்­ப­டுத்­திய இயக்­கு­நர் சீனு ராம­சாமி இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

அதில் உல­கத் தமி­ழர்­கள்­தான் விஜய் சேது­ப­தி­யின் இத­யம் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“சேது­பதி நடிக்­கும் ‘யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்’ திரைப்­படம்­தான் அதற்­குச் சான்று. ஈழத்­தமி­ழர் உள்­ளத்­திற்கு அரு­ம­ருந்து. உள்­ளங்­கைக்கு முத்­தம். மக்­கள் செல்வா... நீரே எங்­கள் தமிழ்ச் சொத்து ஐயா, நமக்கு எதற்கு மாத்­தையா? மாற்­றய்யா?” என்று சீனு ராமசாமி தமது பதி­வில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே விஜய் சேது­பதி இந்­தப் படத்­தில் நடிப்­பது குறித்து விரை­வில் விளக்­க­ம­ளிப்­பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தனது வாழ்க்கை வர­லாறு படத்­தில் விஜய் சேது­பதி போன்ற திறமை வாய்ந்த நடி­கர் நடிப்­ப­து­தான் பொருத்­த­மாக இருக்­கும் என முத்­தையா முர­ளி­த­ரன் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் தாம் அடுத்து நடிக்க உள்ள படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் விஜய் சேது­பதி. தற்­போது ‘மாந­க­ரம்’ படத்­தின் இந்தி மறு­ப­திப்­பில் அவ­ரும் இணைய இருப்­ப­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

சுமார் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் வெளி­யான படம் ‘மாந­க­ரம்’. அதில் ஸ்ரீ, சந்­தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மது­சூ­த­னன், முனீஸ்­காந்த் உள்­ளிட்ட பலர் நடித்­தி­ருந்­த­னர்.

இப்­ப­டம் விமர்­சன ரீதி­யா­க­வும், வசூல் ரீதி­யா­க­வும் மாபெ­ரும் வர­வேற்­பைப் பெற்­றது. தற்­போது இப்­படம் இந்­தி­யில் மறு­ப­திப்பு ஆகிறது.

ஒளிப்­ப­தி­வா­ளர் சந்­தோஷ் சிவன் இயக்க உள்­ளார். இதில் விக்­ராந்த் மாசே நாய­க­னாக நடிக்க, முக்­கி­ய கதா­பாத்­தி­ரத்­தில் சேது­ப­தியை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

தற்­போது எஸ்.பி.ஜன­நா­தன் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் ‘லாபம்’ படத்­தின் இறு­திக்­கட்­டப் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றுள்­ளார் விஜய் சேது­பதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!