எதிர்ப்பு வலுக்கிறது

இந்­தி­யா­வில் பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் தலை­வி­ரித்து ஆடு­கின்­றன. பெண்­க­ளுக்கு நடக்­கும் பாலி­யல் ரீதி­யான துன்­பங்­கள் தொடர்ந்து நடந்­து­கொண்டே இருக்­கின்­றன.

திரை­யு­ல­கத்­தைச் சேர்ந்த ஒரு சிலர் சமு­தாய அக்­கறை இல்­லா­மல் எடுக்­கும் திரைப்­ப­டங்­கள் தற்­பொ­ழுது மிக­வும் வக்­கிர நிலை­மைக்­குப் போய்க்­கொண்டு இருக்­கின்­றன.

இயக்­கு­நர் சந்­தோஷ் பி ஜெய­கு­மார் இயக்­கிய முதல் இரண்டு படங்­க­ளான ‘ஹர­ஹர மஹா­தே­வகி’, ‘இருட்டு அறை­யில் முரட்டு குத்து’ படங்­கள் குடும்­பத்­து­டன் இணைந்து பார்க்க முடி­யாத அள­வுக்கு இருந்­தன.

இவர் தற்­பொ­ழுது இயக்கி இருக்­கும் படம் ‘இரண்­டாம் குத்து’. இந்­தப் படத்­தின் முதல் சுவ­ரொட்டி வெளி­யா­ன­போதே கடும் எதிர்ப்­பு­கள் கிளம்­பின. மேலும் அண்­மை­யில் இவர் வெளி­யிட்ட இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக்­காட்சி மிக­வும் ஆபா­ச­மா­க­வும் வக்­கி­ர­மான காட்­சி­க­ளு­ட­னும் இருந்­தன.

முன்­னோட்­டக் காட்­சி­யைப் பார்த்த பல­ரும் கடும் கண்­ட­னம் தெரி­வித்து வரு­கி­றார்­கள். மூத்த இயக்­கு­ந­ரான பாரதி ராஜா, “பல கலை­ஞர்­கள் கட்­டி­ய­மைத்த கூடு இந்­தத் திரை­யு­ல­கம். இன்று வியா­பா­ரம் என்ற போர்­வை­யில் கண்­ணி­ய­மற்று சீர­ழிக்­கி­றோமோ என்ற கவலை மேலிட ஒரு வலி­யோடு பார்க்­கி­றேன்.

“திரைப்­ப­டம் வியா­பா­ரம்­தான். ஆனால் தற்­பொ­ழுது இது தறி­கெட்­டுப்­போய்க் கொண்டு இருப்­பது மிக­வும் வேத­னை­ய­டை­யச் செய்­கிறது. இதற்­கா­கவா இத்­தனை ஜாம்­ப­வான்­கள் சேர்ந்து இந்த திரைத்­து­றை­யைக் கட்­ட­மைத்­தார்­கள்? ‘இரண்­டாம் குத்து’ படத்­தின் சுவ­ரொட்­டி­கள் கண்­க­ளைக் கூசு­கின்­றன. பள்ளி, மருத்­து­வ­மனை, கோயில் போன்­ற­வற்­றின் சுவர்­களில் இந்த சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்டு இருக்­கின்­றன.

“இதை­யெல்­லாம் செய்­ப­வர்­கள் வீட்­டில் பெண்­களே இல்­லையா? அவர்­கள் இதைக் கண்­டிக்க மாட்­டார்­களா? அவர்­கள் கண்­டிப்­பார்­களோ இல்­லையோ நான் இங்­கி­ருக்­கும் மூத்­த­வர்­களில் ஒரு­வன் என்ற முறை­யில் கண்­டிப்­பேன். இப்­ப­டி­யொரு ஆபா­சம் தமிழ்த் திரை­யு­ல­கிற்கு ஆகாது எனக் கண்­டிக்­கி­றேன். இதற்­கெல்­லாம் கிடுக்­கிப்­பிடி வேண்­டும் என அர­சை­யும் தணிக்­கைக் குழு­வை­யும் வலி­யு­றுத்­து­கி­றேன். சமூ­கச் சீர்­கே­டு­கள் செய்­யும் இப்­ப­டத்தை அரங்­கேற்­றா­தீர்­கள்,” என்று கண்­ட­னம் தெரி­வித்து இருந்­தார்.

அதற்கு இந்­தப் படத்­தின் இயக்­கு­நர் சந்­தோஷ் பதி­ல­டி­யாக, “கண்­ட­னம் தெரி­வித்து இருக்­கும் பார­தி­ராஜா இயக்­கிய ‘டிக் டிக் டிக்’ படம் வெளி­யா­ன­போது கூசாத கண்­கள் இப்­போது கூசு­கி­றதா?” என்று அவரை அவ­ம­தித்து கிண்­ட­லாக பதி­விட்டு இருந்­தார். அத­னால் சந்­தோஷ்­மீது பல­ருக்­கும் வெறுப்­பு­ணர்வு அதி­க­மா­னது. பல திரைப்­பி­ர­ப­லங்­களும் ரசி­கர்­களும் அவ­ருக்கு கண்­ட­னம் தெரி­வித்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில் தனது செய­லுக்கு வருத்­தம் தெரி­வித்­துள்­ளார் சந்­தோஷ். இது­தொ­டர்­பாக அவர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், “பாரதி ராஜா­வின் அறி­விப்­புக்கு அவ­ச­ர­மாக பதி­லிட்­டு­விட்­டேன். அதற்­காக வருத்­தம் தெரி­விக்­கி­றேன்.

“தமிழ் சினி­மா­வின் மூத்த இயக்­கு­நர் பார­தி­ராஜா. அவ­ரின் சாத­னை­களில் 1 விழுக்­கா­டா­வது நாம் செய்ய மாட்­டோமா என்று பல­ரும் பணி­பு­ரி­கி­றார்­கள். பல இயக்­கு­நர்­க­ளுக்கு அவர் வழி­காட்­டி­யாக இருந்­துள்­ளார்.

“அவ­ரின் அறிக்­கைக்கு நான் அப்­படி எதிர்­வி­னை­யாற்றி இருக்­கக்­கூ­டாது. இதற்கு அடுத்து வரும் சுவ­ரொட்­டி­கள், படம் சம்­பந்­தப்­பட்ட செய்­தி­கள், அனைத்து தரப்பு மக்­களும் பார்க்­கும் வகை­யில் இருக்­கும் என்று உறுதி

யளிக்­கி­றேன்,” என்று பதி­விட்டு இருக்­கி­றார்.

இந்­நி­லை­யில், தமிழ் கலா­சா­ரத்­திற்கு எதி­ரான படங்­க­ளைத் தடை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமைச்­சர் கடம்­பூர் ராஜு தெரி­வித்­துள்­ளார். மேலும் அவர் கூறி­ய­தா­வது: “தமிழ்க் கலா­சா­ரம், பண்­பாட்டை சீர­ழிக்­கும் எந்த பட­மாக இருந்­தா­லும் தடை விதிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். திரைப்­ப­டங்­களில் வரும் ஆபாச காட்­சி­களை நீக்க மத்­திய அர­சுக்­கும் தணிக்­கைக் குழு­வுக்­கும் வலி­யு­றுத்­தப்­படும். அத்­த­கைய படத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்க தமிழ்­நாடு அரசு நட­வ­டிக்கை எடுக்­கும். மக்­க­ளுக்கு நல்ல கருத்­து­க­ளைக் கூறும் சாத­ன­மாக திரைப்­ப­டங்­கள் இருக்­க­வேண்­டும்,” என்று கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!