ரஜினிக்குப் பிடித்த மாதம் பிப்ரவரி

ரஜினிக்குப் பிடித்த மாதம் பிப்ரவரி

2 mins read
a1403a8a-1abd-4cc3-905e-6d28cc38c785
படம்: ஊடகம் -

உலகை ஆட்­டிப்­ப­டைக்­கும் கொரோனா நோய்த்­தொற்று வய­தில் மூத்­த­வர்­க­ளை­யும் அறுவை சிகிச்சை செய்துகொண்­ட­வர்­க­ளை­யும் அதி­க­மா­கப் பாதிக்­கிறது என்று கூறப்­ப­டு­கிறது. அத­னால் அப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் முடிந்த அள­வுக்கு எச்­ச­ரிக்­கை­யா­கவே இருக்­கி­றார்­கள். நம்ம அண்­ணாத்­தை­யும் அப்­ப­டித்­தான் என்­கிறது கோலி­வுட்.

குறு­கிய காலத்­தி­லேயே 'அண்­ணாத்த' படத்தை முடித்­து­வி­ட­வேண்­டும் என்ற முடி­வில்­தான் படத்­தில் நடிக்க முன் வந்­தார் ரஜினி. இடை­யில் கொரோ­னா­வால் ஐந்து மாத­ங்களாக படப்­பி­டிப்பு இல்­லா­மல் போனது.

ரஜி­னி­யும் பண்ணை வீட்­டி­லேயே முடங்­கி­னார். பேர­னைப் பார்ப்­ப­தற்­குக்­கூட ஒரே ஒரு முறை­தான் வெளியே வந்­தார். அதற்கே அவர் 'இ-பாஸ்' எடுத்­தாரா இல்­லையா என்று ஏகப்­பட்ட கேள்­வி­கள் எழுந்­தன.

தற்­பொ­ழுது அரசு கட்­டுப்­பா­டு­களில் நிறைய தளர்­வு­கள் வந்­தி­ருக்­கின்­றன. படப்­பி­டிப்­புக்கு அனு­மதி கொடுத்­த­தால் 'அண்­ணாத்த' படத்தை தயா­ரிக்­கும் 'சன் பிக்­சர்ஸ்', ரஜி­னி­யி­டம் படப்­பி­டிப்புத் தொடங்கலாமா? என்று கேட்­டது. அவ­ரும் அதுக்கு சரி என்று சொல்­லி­ய­தால் ஹைத­ரா­பாத் 'ராமோ­ஜீ­ராவ் பிலிம் சிட்டி'யில் பிர­ம்மாண்­ட­மான அரங்­கம் போடப்­பட்­டது.

திடீ­ரென்று அரங்­கம் அமைத்­த­வர்­களில் மூவ­ருக்கு கொரோனா என்று தெரி­ய­வர மொத்த படப்­பி­டிப்­புக் குழு­வும் ஆடிப்­போ­யி­ருக்­கிறது. கிருமி நாசினி தெளித்து ஆமை வேகத்­தில் வேலை­கள் நடந்­தி­ருக்­கின்­றன.

ஒரு வழி­யாக அரங்கு வேலை­யெல்­லாம் முடிந்து படப்­பி­டிப்பு ஆரம்­பித்த அன்­றைக்கு படக்­கு­ழு தயா­ராக இருக்க, ரஜினி மட்­டும் வர­வில்லை.

அதிர்ந்துபோன படக்­கு­ழு­வி­னர் விசா­ரித்­த­தில் 'படப்­பி­டிப்­பில் கலந்­து­கொள்ள 100 பேருக்­குத்­தான் அனு­மதி இருக்­கிறது. ஆனால், எடுக்க இருந்த காட்­சி­யில் 300 பேர் நடித்­தால்­தான் நன்­றாக இருக்­கும். அதற்காக 300 பேரை நடிக்க வைத்­தால் அது பிரச்­சி­னை­யாகிவிடும் என்று 'சன் பிக்­சர்ஸ்' யோசித்­தி­ருக்க, அந்த 100 பேருக்கே பயந்­தி­ருக்­கி­றார் ரஜினி. இத்­தனை பேர் இருக்­கும் கூட்­டத்­தில் நடிக்­கப்­போய் ஏதா­வது ஆகி­வி­டுமோ என்று யோசித்­தி­ருக்­கி­றார் ரஜினி.

தனி­யார் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­தால்­தான் எஸ்.பி.பிக்கு கொரோனா வந்து இறந்­தார் என்று நெருக்­க­மா­ன­வர்­கள் சொல்ல, "படப்­பி­டிப்­பில் கலந்­து­கொள்ள முடி­யாது," என்று திட்­ட­வட்­ட­மாக சொல்­லிவிட்­டா­ராம் ரஜினி.

இப்­போது இல்­லை­யென்­றால் பிறகு எப்­போது? என்று படக்­குழு விசா­ரிக்க, வந்த பதி­லைக் கேட்டு தலை­சுற்­றிப் போனார்­க­ளாம். பிப்­ர­வரி மாதம்­தான் படப்­பி­டிப்­புக்­கும் அர­சி­ய­லுக்­கும் சரி­யாக இருக்­கும் என்று ரஜினி முடிவு எடுத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்பட்டது.

'அண்­ணாத்த' படத்தை முடித்­து­விட்டு விரை­வில் அர­சி­யல் பக்­கம் கவ­னம் செலு­த்த வேண்டும் என்­று­தான் கமல் படத்­தையே மறுத்­தார். ஆனா­லும் மிரட்­டும் கொரோ­னா­வுக்கு யார்­தான் மிர­ளாமல் இருக்­கி­றார்­கள்? இதில், ரஜினி

மட்­டும் விதி­லக்கா என்ன? என்­கிறது கோலி­வுட்.