‘மரியாதை தர வேண்டும்’

‘பிகில்’ படத்தை அடுத்து தமி­ழில் ‘லிஃப்ட்’ என்ற படத்­தில் நடித்­துள்­ளார் அம்­ரிதா.

‘பிகில்’ படத்­தில் கால்­பந்து அணி­யின் தலை­வி­யாக நடித்த இவர், நிஜத்­தி­லும் விளை­யாட்டு வீராங்­க­னை­தான். கூடைப்­பந்து விளை­யாட்­டில் கெட்­டிக்­கா­ரர்.

ஏற்­கெ­னவே சில தமிழ்ப் படங்­களில் சிறிய கதா­பாத்­தி­ரங்­களில் தலை­காட்டி உள்­ளார் அம்­ரிதா. ‘படை­வீ­ரன்’தான் இவ­ரது முதல் படம். அதன்­பி­றகு ‘காளி’யிலும் நடித்­துள்­ளார்.

“எனி­னும் ‘பிகில்’ படத்­தில் ஏற்று நடித்த ‘தென்­றல்’ கதா­பாத்­தி­ரம்­தான் என்னை தமிழ் ரசி­கர்­க­ளி­டம் பெரிய அள­வில் கொண்டு சேர்த்­தது.

“அதன்­பி­றகு எல்­லோ­ரும் என்னை ‘தென்­றல்’ என்றே குறிப்­பி­டு­கி­றார்­கள். எங்கு சென்­றா­லும் அந்­தப் பேரை உரக்­கச் சொல்லி ரசி­கர்­கள் கைய­சைக்­கும்­போது உற்­சா­க­மாக உணர்­கி­றேன்,” என்று சொல்­லும் அம்­ரிதா, வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம் என்­ப­தால் ‘லிஃப்ட்’ படத்­தில் நடிக்க ஒப்­புக்­கொண்­டா­ராம். இதில் ‘பிக்­பாஸ்’ கவி­னுக்கு ஜோடி­யாக நடித்­துள்­ளார்.

“படத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்டி மறை­மு­க­மாக உணர்த்­து­வ­தைப் போல் நானும் கவி­னும் ‘லிஃப்ட்’ ஒன்­றில் மாட்­டிக் கொள்­கி­றோம். அதன்­பி­றகு என்ன நடக்­கிறது என்­ப­து­தான் கதை.

“அது­மட்­டு­மல்ல, மொத்த கதை­யும் ஒரு நாளின் பகல் பொழு­தில் மட்­டுமே நடப்­ப­து­போல் திரைக்­கதை அமைத்­துள்­ள­னர்.

“கவின் பழ­கு­வதற்கு இனி­மை­யானவர். ஒவ்­வொரு காட்­சி­யி­லும் எப்­படி நடிப்­பது என்று இரு­வ­ரும் கலந்து ஆலோ­சித்து திட்­ட­மிட்டு நடித்­தோம். படம் விரை­வில் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கி­றேன்,” என்று சொல்­லும் அம்­ரி­தா­வுக்கு இந்­தப் படம் தொடர்­பில் சில வருத்­தங்­களும் உள்­ளன.

படப்­பி­டிப்பு முழு­மை­யாக முடிந்­து­விட்­டதா என்­பதே தெரி­யாத நிலை­யில் பின்­னணி குரல் பதி­வுக்கு இவரை அழைக்­கவே இல்­லை­யாம். பட வேலை­கள் எந்த அள­வில் உள்­ளன என்ற விவ­ரத்­தை­யும் தெரி­விக்­க­வில்­லை­யாம்.

“படம் என்­ன­வா­யிற்று என்று பல­ரும் என்­னி­டம் விசா­ரிக்­கி­றார்­கள். ஆனால் உண்­மை­யில் எனக்கு எந்த விவ­ர­மும் தெரி­யாது. படக்­கு­ழு­வைச் சேர்ந்த எவ­ரும் என்­னைத் தொடர்பு கொள்­ள­வில்லை. இந்­நி­லை­யில் அண்­மை­யில் பின்­ன­ணிக் குரல் பதி­வை­யும் செய்து முடித்­துள்­ள­னர்.

“நான் ஒரு தமிழ்ப் பெண். நன்­றாக சர­ள­மாக தமிழ் பேசு­வேன். எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு நானே பின்­ன­ணிக் குரல் கொடுக்­க­வேண்­டும் என ஆவ­லு­டன் காத்­தி­ருந்­தேன்.

“ஆனால், வேறு யாரையோ வைத்து அந்த வேலையை முடித்­துள்­ள­னர். இது­கு­றித்து எனக்கு தக­வல்­கூ­டத் தெரி­விக்­க­வில்லை. ஒரு படத்­துக்­காக முழு­மை­யாக, கடு­மை­யாக உழைக்­கி­றோம். பதி­லுக்கு நமக்­கு­ரிய மரி­யா­தையை எதிர்­பார்ப்­ப­தில் என்ன தவறு இருக்க முடி­யும்?” என்று கேள்வி எழுப்­பு­கி­றார் அம்­ரிதா.

இவ­ரது சிரிப்பு அழ­காக இருப்­ப­தாக ரசி­கர்­கள் பல­ரும் கூறு­கின்­ற­னர். அதி­லும் தெற்­றுப்­பல் தெரிய சிரிக்­கும்­போது கூடு­தல் அழ­கைக் காண­மு­டி­கிறது என்­றும் சில ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அந்­தத் தெற்­றுப்­பல்­லைச் சீர­மைக்­க­லாமா என தனது ரசி­கர்­கள் மத்­தி­யில் சிறு கருத்­துக்­க­ணிப்­பையே நடத்தி முடித்­துள்­ளார் அம்­ரிதா. பெரும்­பா­லா­னோர் அதை அப்­ப­டியே விட்­டு­வி­டு­மாறு அறி­வு­றுத்தி உள்­ள­ன­ராம். அத­னால் எது­வும் செய்­ய­வேண்­டாம் என்று முடிவு செய்­தி­ருக்­கி­றார்.

“நான் பெங்­க­ளூ­ரு­வில்­தான் படித்து முடித்­தேன். கூடைப்­பந்து விளை­யாட்­டில் ஆர்­வம் அதி­கம். படிப்பை முடித்­த­பி­றகு பெரிய நிறு­வ­னம் ஒன்­றில் பணி­யில் சேர்ந்­தா­லும் மாட­லிங் மீதும் என பார்வை பதிந்­தி­ருந்­தது. சில குறும்­ப­டங்­கள், விளம்­ப­ரங்­களில் நடித்­தி­ருக்­கி­றேன்.

“அத­னால் சென்­னைக்­கும் பெங்­க­ளூ­ருக்­கும் இடையே அடிக்­கடி பய­ணம் மேற்­கொள்ள வேண்டி இருந்­தது. இப்­ப­டி­யொரு சூழ­லில்­தான் ‘படை­வீ­ரன்’ படத்­தில் நடிக்­கும் வாய்ப்­புக் கிடைத்­தது. அத­னால் வேலையை உத­றி­விட்டு மொத்­த­மாக சினிமா பக்­கம் வந்­து­விட்­டேன். நான் எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் கிடைத்து வரு­கின்­றன,” என்­கி­றார் அம்­ரிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!