சுடச் சுடச் செய்திகள்

அக்‌ஷரா: மனதுக்குப் பிடித்தால்தான் நடிப்பேன்

ஒரே சம­யத்­தில் பல படங்­களில் நடிப்­ப­தில் தமக்கு விருப்­ப­மில்லை என்­கி­றார் அக்­‌ஷரா.

தமி­ழில் இவர் நடித்­துள்ள படங்­களை விரல் விட்டு எண்­ணி­வி­ட­லாம். எனி­னும் கமல்­ஹா­ச­னின் மகள் என்­ப­தைத் தமது பல­மா­கக் கரு­தா­மல் பிடித்­த­மான கதை­களில் மட்­டும் நடித்து வரு­கி­றார்.

அந்த வகை­யில் அக்­‌ஷரா நடிப்­பில் அடுத்து வெளி­யாக இருக்­கிறது ‘அச்­சம் மடம் நாணம் பயிர்ப்பு’. ராஜா ராம­மூர்த்தி இயக்­கும் படம் இது. அவர் சொன்ன கதை மனதை வெகு­வா­கக் கவர்ந்துவிட்­டது என்­றும் அத­னால்­தான் அதிக நாட்­கள் கால்­ஷீட் தந்து நடித்­த­தா­க­வும் சொல்­கி­றார் அக்­‌ஷரா.

“இது­போன்ற ஒரு திரைப்­படம் தமி­ழில் இது­வரை வந்தி­ருக்க வாய்ப்­பில்லை. அவ்வளவு ஏன் இந்­திய அளவில் இப்­படி ஒரு படம் வரவில்லை என்­பேன். ராஜா ராம­மூர்த்தி கதை சொன்ன விதம் மட்­டு­மல்ல, கதை­யும் எனக்கு மிக­வும் பிடித்­துப்போனது.

“என்­னால் நூறு விழுக்­காடு உழைக்க முடியும் என்ற நம்­பிக்கை வந்த பிறகே ஒரு படத்­தில் நடிப்­பது குறித்து முடிவு செய்­வேன். இந்­தப் படத்­துக்­கும் அப்­ப­டி­த்தான் முடி­வெ­டுத்­தேன்,” என்­கி­றார் அக்­‌ஷரா.

இதில் பவித்ரா என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளா­ராம். இப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரம்­தான் ஒரு நடி­கையை, அவ­ரது திற­மையை ரசி­கர்­க­ளி­டம் முழு­மை­யா­கக் கொண்டு சேர்க்­கும் என்­கி­றார்.

“பவித்ரா என்ற கதா­பாத்­தி­ரத்தை மிக நேர்த்­தி­யா­கச் செதுக்­கி­யுள்­ளார் ராஜா ராம­மூர்த்தி. சரா­சரி ரசி­கை­யா­க­த்தான் அவர் சொன்ன கதை­யைக் கேட்­டேன். அவர் விவ­ரித்த ஒவ்­வொரு காட்­சி­யும் பவித்ரா என்ற கதா­பாத்­தி­ர­மும் என்னை அணு அணு­வாக ரசிக்க வைத்­தது. என்­னைப் போலவே ரசி­கர்­களும் இந்­தப் படத்தை ரசிப்­பார்­கள் என நம்­பு­கி­றேன்.

“மிகச் சிறந்த படக்­கு­ழு­வில் பணி­யாற்­றிய திருப்தி கிடைத்­தது. படக்­கு­ழு­வில் இடம்­பெற்­றி­ருந்த ஒவ்­வொரு தனி­ந­ப­ரும் தங்­க­ளு­டைய பங்­க­ளிப்பை நிறை­வா­கத் தந்­துள்­ள­னர்,” என்று சொல்­லும் அக்­‌ஷ­ரா­வுக்கு இயக்­கு­ந­ராக வேண்­டும் என்பது ­தான் நீண்­ட­நாள் கனவு. அதற்­கா­கத் தன்னை ஒவ்­வொரு கட்­ட­மா­கத் தயார்­ப்ப­டுத்தி வரு­கி­றாராம்.

“திரைப்­ப­டம் இயக்கவேண்­டும் என்று ஆசைப்­படு­கி­றேன் என்­பதை பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றேன். எனது இந்த விருப்­பம் விரை­வில் நிறை­வே­றும் என்ற நம்­பிக்கை உள்­ளது. சூழ்­நிலை சரி­யாக அமைந்­தால் 2022ஆம் ஆண்டு என்னை இயக்­கு­ந­ரா­கச் சந்­திக்க வாய்ப்­புள்­ளது,” என்­கி­றார் அக்­‌ஷரா ஹாசன்.

‘அச்­சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்­தில் பிர­பல பின்­ன­ணிப் பாடகி உஷா உதுப் இவ­ரது பாட்­டி­யாக நடிக்­கி­றார். கதைப்­படி இதில் அக்­‌ஷரா­வுக்­குப் பாடகி வேடம் என்று தக­வல். மால்­குடி சுபா, அஞ்­சனா ஜெயப்­பி­ர­காஷ், கலை­ராணி, ஷாலினி விஜ­ய­கு­மார், சுரேஷ் மேனன் உள்­ளிட்ட பலர் முக்­கி­யக் கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon