‘எதிர்பார்க்கவே இல்லை’

இப்போதைய 2020ஆம் ஆண்டு எதிர்­பா­ரா­த­வைகள் நிறைந்த ஆண்­டாக அமைந்­து­விட்­டது என்­கி­றார் நடிகை ஆன்ட்­ரியா.

கொரோனா கிரு­மித்­தொற்று போன்ற எதிர்­பா­ராத விஷ­யம் ஒட்­டு­மொத்த உல­கத்­தை­யும் மாற்றி அமைத்­துள்­ளது என்­ப­தோடு தமது தனிப்­பட்ட வாழ்க்­கை­யி­லும் பல மாற்­றங்­க­ளைக் கொண்டு வந்­தி­ருப்­ப­தாகச் சொல்­கி­றார்.

இந்த ஊர­டங்கு வேளை­யில் பொழு­தைப் பய­னுள்ள வகை­யில் செல­வி­டு­ப­வர்­களில் இவ­ருக்­கும் முதன்­மை­யான இடத்­தைக் கொடுக்­க­லாம். வீட்­டில் இருந்­த­ப­டியே அடுத்து நடிக்­க­வுள்ள படங்­க­ளுக்­கான நடிப்பு, நட­னப் பயிற்­சியை மேற்­கொள்­வது, தமக்­குப் பிடித்­த­மான இசைத்­துறை சார்ந்த வேலை­களில் ஈடு­ப­டு­வது, சமை­யல் செய்­வது என்று பல வேலை­களில் முனைப்­பு­டன் ஈடு­பட்­டுள்­ளார் ஆன்ட்­ரியா.

நாள் முழு­வ­தும் ஏதே­னும் ஒரு வேலை­யைக் கவ­னிப்­ப­தால் ஊர­டங்­கு, கொரோ­னா­வால் இவரை அசைத்­துக்கூடப் பார்க்க முடி­ய­வில்லை. அண்­மைய சில தினங்­க­ளாக தாம் தினந்­தோ­றும் சமைக்­கும் வித்­தி­யா­ச­மான உண­வு­வ­கை­கள் குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்டு வரு­கி­றார். இதைக் கவ­னிப்­பதற்கென்றே ஒரு கூட்­டம் இவ­ரைப் பின்­தொ­டர்­கிறது. தற்­போது தன் வீட்டு மொட்டை மாடி­யில் காய்­க­றி­க­ளை­யும் வளர்க்­கத் தொடங்­கி­யுள்­ளார் ஆன்ட்­ரியா.

“இந்த ஆண்டு நான் எதிர்­பா­ராத பல விஷ­யங்­கள் நடந்துகொண்­டி­ருக்­கின்­றன. ஆண்­டின் துவக்­கத்­தில் நீ சமைக்­கப்போகி­றாய், காய்­கறி பயி­ரி­டப்­போ­கி­றாய் என்று யாரே­னும் என்­னி­டம் சொல்­லி­யி­ருந்­தால் பதி­லுக்கு அவர்­க­ளைப் பார்த்து சிரித்து, இந்­தாண்­டின் சிறந்த நகைச்­சுவை என்று முகத்­துக்கு நேரா­கச் சொல்லி கேலி செய்­தி­ருப்­பேன்.

“கார­ணம், சமை­ய­ல­றைப் பக்­கம் நான் அதி­கம் போன­தில்லை. ஆனால், இப்­போது நடப்­ப­தை­யெல்­லாம் பார்த்­தால், எனக்கே ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது. இதோ தின­மும் ஏதா­வது ஒரு உண­வைச் சமைக்­கி­றேன். அது­கு­றித்து எனது ரசி­கர்­க­ளு­டன் பகிர்ந்து வரு­கி­றேன்.

“என் வீட்டு மொட்டை மாடி எனக்­குப் பிடித்­த­மான இடங்­களில் ஒன்­றாகிவிட்­டது. அங்கு காய்­க­றி­க­ளைப் பயி­ரிட்டு அவற்றை அன்­றாட உண­வுக்­குப் பயன்­ப­டுத்­து­வேன் என்று கன­வில்­கூட நினைத்­த­தில்லை.

“இந்த உல­க­மும் வாழ்க்­கை­யும் நம்மை அடுத்­தடுத்து எங்கு அழைத்­துச் செல்­லும் என்­பதை யாரா­லும் கணிக்க முடி­யாது. எனவே, திறந்த மன­து­டன் வாழ்க்­கையை எதிர்­கொள்­ளுங்­கள். அன்­றா­டம் ஓர் அதி­ச­யம் நிக­ழக்­கூ­டும்,” என்று உற்­சா­கத்­து­டன் பேசு­கி­றார் ஆன்ட்­ரியா.

தற்­போது படப்­பி­டிப்­பு­களில் பங்­கேற்­கத் தயா­ராகி வரும் இவர், தமது அண்­மைய புகைப்­ப­டத் தொகுப்­பை­யும் வெளி­யிட உள்­ளார். ஆன்ட்­ரியா நடிப்­பில் அடுத்து வெளி­யாக உள்ள படம் ‘மாஸ்­டர்’.

இவ­ரைப் போலவே எதிர்­பா­ராத சில சம்­ப­வங்­கள் தம்மை உற்­சா­கப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கச் சொல்­கி­றார் பூஜா ஹெக்டே.

தற்­போது இவர் படப்­பி­டிப்­புக்­காக இத்­தா­லி­யில் முகா­மிட்­டுள்­ளார். ராதா கிருஷ்­ண­கு­மார் இயக்­கும் ‘ராதேஷ்­யாம்’ படத்­தில் இவர்­தான் நாய­கன் பிர­பா­ஸுக்கு ஜோடி.

இந்­நி­லை­யில் அக்­டோ­பர் 13ஆம் தேதி இவ­ரது பிறந்­த­நாள் என்­பது படக்­கு­ழு­வி­ன­ருக்­குத் தெரி­ய­வந்­துள்­ளது. இதை­ய­டுத்து அழ­கான கேக் ஒன்­றைத் தயார் செய்து அனை­வ­ரும் கூடி வாழ்த்­துச் சொல்லி அதை வெட்ட வைத்­துள்­ள­னர். படக்­கு­ழு­வின் அன்பு திக்­கு­முக்­கா­டச் செய்­தது என்­றால், இத்­தா­லி­யில் உள்ள ரசி­கர்­கள் தேடி வந்து வாழ்த்­தி­யது மேலும் நெகிழ வைத்­த­தா­கச் சொல்­கி­றார் பூஜா.

இவர் தங்­கி­யி­ருந்த தங்கு விடு­திக்கு வெளியே திடீ­ரென சில ரசி­கர்­கள் கூடி­விட்­ட­ன­ராம். அவர்­கள் கையில் ‘பிறந்­த­நாள் வாழ்த்­து­கள் பூஜா’ என்ற வாச­கத்­து­டன் கூடிய பதாகை ஒன்­றை­யும் ஏந்­தி­ இருந்­த­ன­ராம்.

“ரசி­கர்­கள் கூடி என்னை வாழ்த்தி உரக்க சத்­த­மிட்­டது வெகு­வாக ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யது. எனக்­காக சில மணி நேரங்­கள் காத்­தி­ருந்து சந்­தித்­த­து­டன் பரி­சு­களும் அளித்­த­னர். அவர்­க­ளு­டன் பின்­னர் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொண்­டேன்.

“வழக்­க­மான பிடித்­த­மான வேலை, மகிழ்ச்சி, அன்பு, சிரிப்பு, வாழ்த்­து­கள் என எல்­லாம் நிறைந்த இந்­தப் பிறந்­த­நாள் வாழ்க்­கை­யில் மறக்க இய­லாத ஒன்று,” என்று இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டுள்­ளார் பூஜா ஹெக்டே.

இதற்­கி­டையே சமூக வலைத்­த­ளங்­கள் மூல­மா­க­வும் பூஜா­வுக்கு ஏரா­ள­மா­னோர் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர். அவர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழில் புதுப் படம் ஒன்­றில் இவர் ஒப்­பந்­த­மாகி உள்­ள­தாக அண்­மை­யில் ஒரு தக­வல் வெளி­யா­னது. எனி­னும் அத்­த­க­வல் உண்­மை­யல்ல என்று தெளி­வு­ப­டுத்தி உள்­ளார் பூஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!