சுடச் சுடச் செய்திகள்

சுசித்ராவின் தைரியத்தைப் பாராட்டிய இணையவாசிகள்

ரஜி­னி­காந்த் தன்­னு­டைய ராக­வேந்­திரா திரு­மண மண்­ட­பத்­தில் கொரோனா நேரத்­தில் எந்த நிகழ்ச்­சி­யும் நடக்­கா­த­தால் வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தை அணுகியபோது, ‘நீதி­மன்­றத்­தின் நேரத்தை வீணாக்­கா­தீர்­கள்,’ என்று நீதி­பதி கண்­ட­னக் குரல் எழுப்பி இருந்­தார். அதைத் தொடர்ந்து ரஜினி ரூ. 6.5 லட்ச ரூபாயை வரி­யா­கக் கட்­டி­னார்.

அத­னைத்­தொ­டர்ந்து பாடகி சுசித்ரா, “வரி கட்­டு­வ­தற்கு ரஜினி இவ்­வ­ளவு போராடனுமா? மின்­சா­ரம் பயன்­ப­டுத்­தா­ம­லேயே கூடு­தல் மின் கட்­ட­ணம் வந்­த­போது நடி­கர் பிர­சன்னா கட்­ட­வில்­லையா? மக்­கள் பிரச்­சினையை விட உங்­கள் பிரச்­சினை பெரி­தா­கத் தெரிந்­தால் வித்­தி­யா­சத்தை சொல்ல முடி­ய­வில்லை என்­றால் நீங்­கள் எல்­லாம் அர­சி­யல்­வாதி ஆகக் கூடாது என்­றார்.

“அர­சி­யல் என்­பது புனி­த­மா­னது. மக்­க­ளுக்­காக நீங்­கள் ஏதா­வது செய்ய முடி­யும் என்று கட­வுள் நிர்­ண­யித்த ஒரே இடம். தயவு செய்து அதை உங்­க­ளின் தனிப்­பட்ட இட­மாக மாற்ற வேண்­டாம் ரஜி­னி­காந்த் மற்­றும் கமல் ஹாஸன்,” என்று தெரி­வித்­துள்­ளார்.

இவ­ரின் இந்த டுவிட்­டைப் பார்த்து கமல், ரஜினி ரசி­கர்­கள் பொங்­கி­னாலும் பல இணை­ய­வா­சி­கள் அவ­ரின் தைரி­யத்­தைப் பாராட்டி வரு­கி­றார்­கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon