என் கதையைத் திருடி படம் எடுத்துள்ளார்கள்: உதவி இயக்குநர் புகார்

என் கதையைத் திருடி படம் எடுத்துள்ளார்கள்: உதவி இயக்குநர் புகார்

3 mins read
c3b47e00-4a0d-43e6-b098-4b50f3a2accc
'பூமி' படத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால். -

கோடம்­பாக்­கத்­தில் மேலும் ஒரு கதைத் திருட்டு விவ­கா­ரம் பர­பரப்பைக் கிளப்பியுள்­ளது. இம்­முறை பிரச்­சி­னை­யில் சிக்­கி­யி­ருக்­கும் படம் ஜெயம் ரவி நடித்­துள்ள 'பூமி'.

லக்­‌ஷ்­மன் இயக்கி இருக்­கும் இப்­ப­டம் தன்­னு­டைய 'துரு­வன்' கதை­தான் என தென்­னிந்­திய திரைப்­பட எழுத்­தா­ளர்­கள் சங்­கத்­தில் புகார் அளித்­துள்­ளார் கார்த்­திக் கே.பாலாஜி. இவர் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர்.

தென்­னிந்­திய எழுத்­தா­ளர் சங்­க­மும் கார்த்­திக்­கின் புகா­ரைப் பெற்று, சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளி­டம் தீவி­ர­மாக விசா­ரித்து வரு­கிறது. 'பூமி'யின் தயா­ரிப்­பா­ள­ரான சுஜாதா விஜ­ய­கு­மா­ரி­ட­மும் விளக்­கம் கேட்­டி­ருக்­கிறது. முதற்­கட்­ட­மாக கதைச்­சு­ருக்­கத்தை தரு­மாறு கூறி­யுள்­ள­ன­ராம்.

கார்த்­திக் பாலாஜி தரப்பு அதை உட­ன­டி­யாக கொடுத்­து­விட்ட நிலை­யில், லக்­‌ஷ்­மன் தரப்பு கதைச்­சுருக்­கம் இல்லை என்­றும், வாய்­மொ­ழி­யாக கதையை விவ­ரிக்க தயார் என்­றும் கூறி­யுள்­ள­தாம். இதைக் கேட்டு எழுத்­தா­ளர் சங்­கம் அதிர்ச்சி அடைந்­துள்­ள­தா­கத் தக­வல்.

லக்­‌ஷ்­ம­னின் முந்­தைய 'போகன்' பட­மும் கதைத் திருட்டு விவ­கா­ரத்­தில் சிக்கி, நீதி­மன்­றம் வரை சென்­றதை கோடம்­பாக்க விவ­ரப்­புள்­ளி­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் 'பூமி'யை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட ஏற்­பா­டு­கள் நடந்து வரு­கின்­ற­ன­வாம். இத­னால் கார்த்­திக் பாலாஜி அதிர்ச்சி அடைந்­தி­ருக்­கி­றார்.

திருச்­சி­யைச் சேர்ந்த இவர், செல்வா உட்­பட சில இயக்­கு­நர்­க­ளி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். 'வேட்டை', 'நிஜம்', 'மறு­ப­டி­யும்' என பல குறும்­ப­டங்­களை இயக்கி பல பரி­சு­க­ளை­யும் வென்­றி­ருக்­கி­றார். இது தவிர ஆவ­ணப்­ப­டங்­களும் இயக்­கி­யி­ருக்­கி­றார்.

தற்­போது சொந்த நிறு­வ­னம் மூலம் விளம்­ப­ரப் படங்­களை இயக்கி வரு­ப­வர், பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பே 'துரு­வன்' கதையை எழு­தி­விட்­டா­ராம். பின்­னர் அக்­க­தையை எழுத்­தா­ளர் சங்­கத்­தில் பதிவு செய்­துள்­ளார்.

"முத­லில் விஷாலை வைத்­து­தான் தனது படத்தை உரு­வாக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­தார் கார்த்­திக் பாலாஜி. அவ­ரது மேலா­ள­ரைச் சந்­தித்து கதை­யும் சொன்­னார். ஆனால், திடீ­ரென விஷா­லி­ட­மி­ருந்து முரு­க­ராஜ் வில­கவே அந்த முயற்சி கைகூ­ட­வில்லை.

"அடுத்து சூர்­யா­வின் சகோ­த­ரர் கார்த்­தியை அணு­கி­னார். கார்த்தி தரப்பு கதை நன்­றாக இருப்­ப­தா­கப் பாராட்­டி­னா­லும் ஏற்­கெ­னவே படம் இயக்­கி­ய­வ­ருக்கு வாய்ப்­ப­ளிப்­பதுதான் கார்த்­தி­யின் கொள்கை என்று கூறி­விட்­ட­தாம். இதன்­பி­றகே ஜெயம் ரவி­யின் பக்­கம் கார்த்­திக்­கின் பார்வை திரும்­பி­யுள்­ளது.

"ஜெயம் ரவி­யைச் சந்­திக்க முற்­பட்­ட­போது அவ­ருக்­காக ஆனந்த் ஜாய் என்­ப­வர்­தான் கதை கேட்­பார் என்று தெரி­ய­வந்­துள்­ளது. இதை­யடுத்து ஆனந்த் ஜாயைச் சந்­தித்­தி­ருக்­கி­றார் கார்த்­திக்.

"கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதமே கார்த்­திக் 'துரு­வன்' கதையை ஆனந்­திடம் விவ­ரிக்க இப்­ப­டிப்­பட்ட ஒரு கதை­யைத்­தான் எதிர்­பார்த்­தோம். அண்­ண­னி­டம் விவ­ரம் தெரி­விக்­கி­றேன்," என்று கூற, கார்த்­திக் மகிழ்ச்­சி­ய­டைந்­தார்.

ஆனால், 'அடங்­க­மறு' படம் வெளி­யீடு கண்­ட­பின் 2019ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஆனந்த் ஜாயின் போக்­கில் மாற்­றம் ஏற்­பட்­ட­தாம் கார்த்­திக் பாலா­ஜி­யு­டன் பேசு­வ­தை­யும் அவ­ரைச் சந்­திப்­ப­தை­யும் அவர் தவிர்த்­தா­ராம்.

இந்­நி­லை­யில் 'பூமி' படம் குறித்த அறி­விப்பு வெளி­யா­ன­தும் கார்த்­திக் தரப்பு அதிர்ச்சி அடைந்­துள்­ளது. தனது கதை­யின் சாய­லு­டன் ஒரு படம் தயா­ரா­வது அவரை வேத­னை­யில் ஆழ்த்தி உள்­ளது. இதை­ய­டுத்து எப்­ப­டியோ ஆனந்த் ஜாயை சந்­தித்­த­போது சிரித்து மழுப்­பி­னா­ராம்.

"என்­னு­டைய கதை­யில்­தான் சிறு மாற்­றங்­க­ளைச் செய்து 'பூமி' படத்தை உரு­வாக்­கு­கி­றார்­கள் என்­பது உறு­தி­யா­னது. இது­கு­றித்து அப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் சுஜாதா விஜ­ய­கு­மா­ரி­டம் பேச­மு­டி­ய­வில்லை. தவிர ஆனந்த் ஜாயி­டம்­தான் நான் முழுக் கதை­யை­யும் சொல்­லி­யி­ருந்­தேன். எனவே இந்­தக் கதைத் திருட்டில் ஜெயம் ரவிக்கோ, தயா­ரிப்­பா­ள­ருக்கோ எந்­தத் தொடர்­பும் இல்லை என நம்­பு­கி­றேன். ஆனந்த் ஜாய்­தான் கதைத்­தி­ருட்­டின் பின்­ன­ணி­யில் உள்­ளார். எழுத்­தா­ளர் சங்­கத் தலை­வர் பாக்­ய­ராஜ் சார் எனக்கு நீதி வழங்­கு­வார் என்ற நம்­பிக்கை உள்­ளது," என்­கி­றார் கார்த்­திக் கே. பாலாஜி.