12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜோடி

நடிகை நயன்­தாரா, திகில் நிறைந்த மலை­யா­ளப் படம் ஒன்­றில் நடிக்க ஒப்­பந்­தம் ஆகி இருக்­கி­றார். இந்­தப் படத்­தில் 12 ஆண்­டு­க­ளுக்கு முன் இணைந்து நடித்த நடி­க­ரு­டன் மீண்­டும் நடிக்க இருப்பதாக அதி­கா­ரபூர்­வ­மாக அறி­வித்து இருக்­கி­றார்.

கடந்த 14 ஆண்­டு­க­ளாக தென்­னிந்­திய ரசி­கர்­களைத் தன் அழகு, கவர்ச்சி மற்­றும் நடிப்­பின் மூலம் கட்டி வைத்­தி­ருக்­கி­றார் நயன்­தாரா. அழ­காக இருக்­கும் நடி­கை­கள் சிலர் கவர்ச்­சி­யாக இருக்க மாட்­டார்­கள். கவர்ச்சி காட்­டும் சில நடி­கை­கள் சரி­யாக நடிக்க மாட்­டார்­கள். நயன் தனது திரை மற்­றும் சொந்த வாழ்­வில் பல துய­ரங்­களைக் கடந்து வந்­தா­லும் இந்த மூன்­றி­லுமே உச்­சத்­தில் கொடி கட்டிப் பறக்­கி­றார்.

இவர் மலை­யா­ளத்­தில் இருந்து தமி­ழில் அறி­மு­க­மா­னா­லும் தமி­ழி­லேயே அதிக படங்­கள் நடித்து வரு­கி­றார். நல்ல திரைக்­க­தை­கள் அமை­யும்­போது மலை­யா­ளத்­தி­லும் நடிக்­கும் நயன்­தாரா, கடந்­தாண்டு நிவின் பாலிக்கு ஜோடி­யாக நடித்த ‘லவ் ஆக்­‌‌ஷன் டிராமா’ திரைப்­

ப­டம் நல்ல வர­வேற்பைப் பெற்­றது.

இந்­நி­லை­யில் மலை­யா­ளத்­தில் உரு­வா­கும் ‘நிழல்’ என்ற திகில் நிறைந்த பேய்ப் படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இதில் நாய­க­னாக குஞ்­சாக்கோ போபன் நடிக்­கி­றார். பிர­பல படத்­தொ­குப்­பா­ள­ரான அப்பு என் பட்­டாத்­திரி இப்­ப­டத்­தின் மூலம் இயக்­கு­ந­ராக அவ­தா­ரம் எடுக்­கி­றார். குஞ்­சாக்கோ போப­னும் நயன்­தா­ரா­வும் ஏற்­கெனவே ‘டுவென்டி 20’ படத்­தில் ஒரு பாடல் காட்­சி­யில் இணைந்து நடித்­தி­ருந்­த­னர். தற்­போது 12 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் இணைந்து ஒரு முழு படத்­தில் நடிக்க இருக்­கின்­ற­னர்.

‘இது கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படம் என்­ப­தால் நயன்­தாரா பொருத்­த­மாக இருப்­பார்,’ என்று தான் பரிந்­து­ரைத்­த­தாக குஞ்­சாக்கோ போபன் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா கார­ண­மாக நடி­கர், நடி­கை­கள் சம்­ப­ளத்தைக் குறைக்­கும்­படி மலை­யாள தயா­ரிப்­பா­ளர் சங்­கம் கேட்­டுக்­கொண்­டது. அதைய­டுத்து மோகன்­லால், டோவினோ தாமஸ் உள்­பட பல முன்­னணி நடி­கர், நடி­கை­கள் தங்­கள் சம்­ப­ளத்தைக் குறைத்­துள்­ள­னர். இந்­நி­லை­யில் இந்­தப் படத்­திற்­காக நடிகை நயன்­தா­ரா­வும் தன்­னு­டைய சம்­ப­ளத்தை வெகு­வா­கக் குறைத்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

ஊர­டங்­கிற்கு முன்பு நயன்­தாரா ரஜி­னி­யின் ‘அண்­ணாத்த’ படத்­தில் நடித்து வந்­தார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்­தில் நயன்­தாரா வழக்­க­றி­ஞ­ராக நடிக்­கி­றார்.

மேலும் ஆர். ஜே. பாலா­ஜி­யின் ‘மூக்­குத்தி அம்­மன்’ படத்­தில் அம்­ம­னாக நடித்து முடித்­துள்­ளார் நயன்­தாரா. அந்த படம் இணை­யத்­தில் வெளி­யா­கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து திரை­ய­ரங்­கில்­தான் வெளி­யா­கும் என்று மறுப்பும் வெளி­யா­கியது. குழப்­பத்­தி­லேயே இருக்­கிறது இந்தப் படம்.

இதற்­கி­டை­யில் தன் காத­லர் விக்­னேஷ் சிவன் தயா­ரிப்­பில் மிலிந்த் ராவ் இயக்­கத்­தில் ‘நெற்­றிக்­கண்’ படத்­தில் நடித்து வந்­தார் நயன்­தாரா. கொரோனா பிரச்­சி­னை­யால் படப்­பி­டிப்பு பாதியில் நிறுத்­தப்­பட்டு இருக்­கிறது.

விக்­னேஷ் சிவன் இயக்­கத்­தில் விஜய் சேது­பதி நாய­க­னாக நடிக்­கும் ‘காத்து வாக்­குல ரெண்டு காதல்’ படத்­தில் நடிக்க இருக்­கி­றார் நயன்­தாரா. விரைவில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon