அடுத்த படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா

1 mins read
60d72039-7fd5-4a36-a415-80c4d33b78a7
-

சூர்யா நடித்து இம்­மா­த இறு­தி­யில் வெளி­வர இருக்­கும் படம் 'சூர­ரைப் போற்று'. இந்­தப் படத்­திற்­குப் பிறகு வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் 'வாடி­வா­சல்' என்ற படத்­தில் நடிக்க இருக்­கி­றார். அதற்­காக தனது தோற்­றத்தை மாற்­றி­யுள்­ளார் சூர்யா.

வி.கிரி­யே­ஷன்ஸ் சார்­பாக கலைப்­புலி தாணு தயா­ரிக்­கும் 'வாடி­வா­சல்' என்ற படம் ஜல்­லிக்­கட்டு விளை­யாட்டை மைய­மாக வைத்து தயா­ரா­கிறது. மெரினா போராட்­டம் மூலம் உலக அள­வில் பிர­ப­ல­மான ஜல்­லிக்­கட்டு படத்­தில் சூர்யா நடிப்­ப­தால் படத்­திற்குப் பெரிய எதிர்­பார்ப்பு உள்­ளது. வேல்­ராஜ் ஒளிப்­ப­திவு செய்ய உள்ள இப்­ப­டத்­திற்கு, ஜி.வி.

பிர­காஷ் இசை­ய­மைக்­கி­றார்.

இந்­தப் படத்­திற்­காக சூர்யா தாடி­யு­டன் காணப்­ப­டு­கி­றார். அந்­தப் படங்­கள் சமூக வலை­த்த­ளங்­களில் மிகு­தி­யாக பகி­ரப்­பட்டு வரு­கின்­றன. இந்த படத்­தில் சூர்யா தந்தை, மகன் என இரு­வே­டங்­களில் நடிக்க உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. விரை­வில் இதன் படப்­பி­டிப்பு தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.