'துக்ளக் தர்பார்' படத்திலிருந்து விலகினார் அதிதி ராவ்

2 mins read
09bb0271-06ac-4b49-b070-183173af6b3a
அதிதி ராவ் இந்தி, தமிழ் திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடித்துள்ளார். இவர் இரண்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் முதல் திரைப்படம் 2007ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த 'சிருங்காரம்' எனும் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம்: ஊடகம் -

நடி­கர் விஜய் சேது­பதி தற்­போது 'துக்­ளக் தர்­பார்' படத்­தில் நடித்து வரு­கி­றார். இப்­ப­டத்தை டெல்லி பிர­சாத் தீன­த­யா­ளன் இயக்­கு­கி­றார். லலித்­கு­மார் தயா­ரிக்­கி­றார். இதன் படப்­பி­டிப்பு கடந்த ஜன­வரி மாதம் தொடங்கி கொரோனா பர­வ­லால் நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

இதில் கதா­நா­ய­கி­யாக அதிதி­ராவை ஒப்­பந்­தம் செய்­தி­ருந்­த­னர். படத்­தின் தொடக்க விழா பூஜை­யி­லும் கலந்­து கொண்­டார் அதிதி. தற்­போது ஊர­டங்கு தளர்­வால் 'துக்­ளக் தர்­பார்' படப்­பி­டிப்பை மீண்­டும் தொடங்­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் 'துக்­ளக் தர்­பார்' படத்­தில் இருந்து அதி­தி­ராவ் திடீ­ரென்று விலகி விட்­டார். கொரோனா ஊர­டங்­கி­னால் ஏற்­பட்ட படப்­பி­டிப்பு குள­று­ப­டி­க­ளால் மற்­றொரு படத்­தில் நடிக்க வேண்­டிய நிர்ப்­பந்­தம் அவ­ருக்கு ஏற்­பட்டு உள்­ளது என்­றும் அத­னால்­தான் விஜய் சேது­ப­தி­யு­டன் நடிக்க தேதி ஒதுக்க முடி­யா­மல் படத்­தில் இருந்து விலகி விட்­டார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டை­யில் தெலுங்­கில் சித்­தார்த், சர்­வா­னந்த் நடிப்­பில் உரு­வா­க­வுள்ள 'மஹா சமுத்­தி­ரம்' படத்­தின் நாய­கி­யாக அதிதி ராவ் ஹைதரி ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

இயக்­கு­நர் அஜய் பூபதி இயக்­க­வுள்ள இந்­தப் படத்­தில் சர்­வா­னந்த் நாய­க­னாக நடிக்­க­வுள்­ளார். இந்­தப் படத்­தில் முக்­கி­யக் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளார் சித்­தார்த்.

'மஹா சமுத்­தி­ரம்' என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்­தப் படத்தை பெரும் பொருட்­செ­ல­வில் தயா­ரிக்க இருக்­கின்­ற­னர். தமிழ் மற்­றும் தெலுங்கு ஆகிய மொழி­களில் இந்­தப் படம் உரு­வா­க­வுள்­ளது. காதல் கலந்த சண்­டைப் பட­மாக உரு­வா­கும் இந்­தப் படத்­தில் நடிக்க அதிதி ராவ் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

'ஆர்.எக்ஸ்.100' வெற்­றிக்­குப் பிறகு அஜய் பூபதி இயக்­கும் இரண்­டா­வது படம் என்­ப­தால் இப்­ப­டம் தெலுங்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.