இரு நண்பர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படம்

இரு நண்பர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படம்

1 mins read
2957349a-ef53-41eb-a323-f06483bea797
படம்: ஊடகம் -

நடிகர் ஜீவாவின் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் 'களத்தில் சந்திப்போம்'.

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை 'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார்.

ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.

ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். "இது நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம். கபடி வீரர்களான ஜீவாவும் அருள்நிதியும் சிறு வயது முதலே நண்பர்கள்.

மேலும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். இருவரது வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இப்படம்," என்கிறார் இயக்குநர்.