நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள 'மூக்குத்தி அம்மன்' படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை அதன் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்குக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. மே 1ஆம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா விவகாரத்தால் அது சாத்தியமாகவில்லை. மேலும், திரையரங்கில்தான் இப்படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. ஆனால், வெளியீடு பல மாதங்கள் தாமதாகி விட்டதால் வேறுவழியின்றி நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இதையடுத்து 'இந்தாண்டு தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்' என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகிறது.
தீபாவளிக்கு வெளியீடு காணும் 'மூக்குத்தி அம்மன்'
1 mins read
-