நயன்தாராவின் கோரிக்கையை ஏற்ற மகேஷ்பாபு

நயன்தாராவின் கோரிக்கையை ஏற்ற மகேஷ்பாபு

1 mins read
da532564-ebca-42e6-a538-0f13af64b067
படம்: ஊடகம் -

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' தெலுங்கு பதிப்பின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை நடிகர் மகேஷ்பாபு வெளியிட்டுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது.

படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தீவிர கிரிக்கெட் ரசிகரான ஆர்.ஜே. பாலாஜி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணி பங்கேற்ற ஓர் ஆட்டத்தின்போது தமிழ் முன்னோட்டத் தொகுப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் தெலுங்கு முன்னோட்டத் தொகுப்பை வெளியிட வேண்டும் என நயன்தாராவும் படக்குழுவினரும் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவ்வாறு செய்துள்ளார் மகேஷ்பாபு.