தீபாவளிக்கு முன்பே வெளியீடு

ஒரு­வ­ழி­யாக ‘சூர­ரைப் போற்று’ பட வெளி­யீட்­டில் நீடித்த சிக்­கல் முடி­வுக்கு வந்­தி­ருக்­கிறது. தீபா­வ­ளிக்கு முன்பே படம் வெளி­யா­கும் என படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த ஏப்­ரல் மாதமே ‘சூர­ரைப் போற்று’ வெளி­யா­கி­யி­ருக்க வேண்­டும். கொரோனா விவ­கா­ரத்­தால் வெளி­யீடு தாம­த­மா­னது.

ஏழு மாதங்­க­ளா­கத் திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டி­ருப்­ப­தால் நேர­டி­யாக இணை­யத்­தில் இப்­ப­டத்தை வெளி­யி­டப் போவ­தாக அறி­வித்­தார் சூர்யா.

அதன்­படி அக்­டோ­பர் 30ஆம் தேதி படம் வெளி­யா­கும் என அறி­விக்­கப்­பட்­டது.

எனி­னும் இந்­திய விமா­னப்­படை தரப்­பி­லி­ருந்து தடை­யில்­லாச் சான்று கிடைக்­கத் தாம­த­மா­ன­தால் மீண்­டும் பட வெளி­யீட்டை ஒத்தி வைத்­த­னர்.

இந்­நி­லை­யில் நவம்­பர் 12ஆம் தேதி ‘சூர­ரைப் போற்று’ வெளி­யா­கும் என அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுதா கொங்­கரா இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் அபர்ணா பால­மு­ரளி நாய­கி­யாக நடிக்க ஜீவி பிர­காஷ் இசை­ய­மைத்­துள்­ளார்.

இதற்­கி­டையே சூர்­யா­வின் 40வது படத்தை பாண்­டி­ராஜ் இயக்­கு­கி­றார். இது­தொ­டர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், “ஒரு தர­மான சம்­ப­வம் உள்ளது. மீண்­டும் சூர்யா மற்­றும் சன் பிக்­சர்ஸ் உடன் இணைந்­த­தில் மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

எஸ். தாணு தயா­ரிக்­க­வுள்ள இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு விரை­வில் தொடங்க உள்­ளது. இது அர­சி­யல் சம்­பந்­தப்­பட்ட கதை என்­றும் சூர்யா அர­சி­யல் தலை­வ­ராக நடிக்க உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சூர்­யா­வின் 39வது படத்தை வெற்­றி­மா­றன் இயக்­கு­கி­றார். இதற்கு ‘வாடி­வா­சல்’ என தலைப்பு வைத்­துள்­ள­னர். இப்­ப­டத்­துக்­கும் ஜீ.வி. பிர­காஷ்­தான் இசை­ய­மைக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!