சுடச் சுடச் செய்திகள்

‘நடிப்பு என்பது வரம்’

அக்­‌ஷரா ஹாசன் நடிக்­கத் தொடங்கி ஐந்து ஆண்­டு­கள் கடந்து விட்­டன. ‘ஷமி­தாப்’ இந்­திப் படத்­தில் அறி­மு­க­மான பின்­னர் கணினி நிபு­ணர், கடத்­தப்­பட்ட இல்­லத்­த­ரசி என்று பல்­வேறு கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் ராஜா­ ரா­ம­மூர்த்தி இயக்­கும் ‘அச்­சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்­தில் 19 வயது இளம்­பெண்­ணாக நடித்­துள்­ளா­ராம்.

இப்­ப­டத்­தின் கதையை எழுதி முடித்­த­தும் முத­லில் அக்­‌ஷ­ரா­வி­டம்­தான் கதை­யைச் சொல்­லத் தோன்­றி­யது என்­கி­றார் ராஜா ராம­மூர்த்தி.

அக்­‌ஷ­ராவை நேரில் சந்­தித்து கதை­யைச் சொன்­ன­தும் அவ­ரும் மிகுந்த ஆர்­வத்­து­டன் நடிக்க சம்­ம­தித்­தா­ராம். அதன்­பி­றகு தான் எழு­திய கதையை மேலும் மெரு­கேற்­றி­யுள்­ளார்.

“பவித்ரா கதா­பாத்­தி­ரத்­தில் நான்­தான் நடிக்­க­வேண்­டும் என்று இயக்­கு­நர் கூறி­ய­போது முத­லில் தயங்­கி­னேன்.

“உண்­மை­யைச் சொல்­ல­வேண்­டு­மா­னால் அந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்­கும் எனது இயல்­புக்­கும் துளி­கூ­டப் பொருத்­த­மில்லை. இரு­வ­ரை­யும் நேரெ­திர் துரு­வங்­கள் என்­று­கூட சொல்­ல­லாம்.

“ஆனால், என்­னு­டன் எந்த வகை­யி­லும் பொருத்­திப் பார்க்க இய­லாத ஒரு கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­ப­தை­யும் சுவா­ர­சி­ய­மான சவா­லா­கக் கரு­தியே நடிக்க ஒப்­புக்­கொண்­டேன்.

“இயக்­கு­நர் ராஜா தனக்கு என்ன தேவை என்­ப­தில் மிகத் தெளி­வாக இருந்­தார். நிறைய இயக்­கு­நர்­க­ளி­டம் இத்­த­கைய தெளி­வைக் காண­மு­டி­யாது.

“எனவே, இந்­தப் படத்­தில் நடிக்­கச் சம்­ம­தித்­த­தில் ஆச்­ச­ரி­யம் ஏது­மில்லை,” என்று சொல்­லும் அக்­‌ஷரா, நடி­கை­யாக இருப்­பது வாழ்க்­கை­யில் கிடைத்த பெரிய வரம் என்­கி­றார்.

அதி­லும் பெற்­றோர், சகோ­தரி ஆகி­யோ­ரும் நடிப்­புத் துறை­யில் இருந்­த­தும் இருப்­ப­தும் பெருமை அளிப்­ப­தா­க­வும் குறிப்­பி­டு­கி­றார்.

“நடி­க­ராக இருப்­ப­தற்கு நிச்­ச­யம் பெரு­மைப்­பட வேண்­டும். அத­னால்­தான் அதை வரம் என்­கி­றேன். ஒரு நடி­கை­யாக வெவ்­வேறு கதா­பாத்­தி­ரங்­களில் வெவ்­வேறு வாழ்க்­கையை வாழ்ந்து பார்க்க முடி­கிறது.

“இதை­யும் எனக்­குக் கிடைத்த ஆசிர்­வா­த­மா­கக் கரு­து­கி­றேன். அனைத்து நடி­கர்­க­ளுமே இப்­ப­டித்­தான் நினைப்­பார்­கள் என நம்­பு­கி­றேன்,” என்­கி­றார் அக்­‌ஷரா.

“உண்­மை­யைச் சொல்ல வேண்­டு­மா­னால் தற்­போது நடிக்­கும் படத்­தில் நான்­தான் கதாநா­யகி என்­பதை உண­ரவே எனக்கு நிறைய காலம் தேவைப்­பட்­டது. அதை உணர்ந்­த­போது ‘அம்­மா­டியோ’ என்று எனக்கு நானே ஆச்­ச­ரி­யப்­பட்­டுக் கொண்­டேன்.

“கதை நாயகி என்­பதை உண­ரத் தொடங்­கி­ய­தும் தொடக்­கத்­தில் சற்றே பதற்­ற­மாக இருந்­தது. இவ்­வ­ளவு பெரிய பொறுப்பை எனக்கு அளித்­தி­ருக்­கி­றார்­களே என்று உள்­ளுக்­குள் ஒரு­வித பெரு­மி­த­மும் ஏற்­பட்­டது. பின்­னர் இயல்பு நிலைக்­குத் திரும்­பி­விட்­டேன்.

“இப்­போது ஒவ்­வொரு நாளும் இந்­தத் திரைப்­ப­டத்­தின் பணி­களில் உற்­சா­கத்­துடன் ஈடு­பட்டு வரு­கி­றேன்,” என்று சொல்­லும் அக்­‌ஷரா, தனிப்­பட்ட ஒரு­வ­ரது உழைப்­பால் மட்­டுமே ஒரு திரைப்­ப­டம் சிறப்­பான படைப்­பாக உரு­வா­கி­விட முடி­யாது என்­கி­றார்.

திரைப்­ப­டம் என்­பது ஒரு கூட்டு முயற்சி என்­றும் தமது தனிப்­பட்ட முயற்­சி­யால் மட்­டும் இது சாத்­தி­ய­மாகி விடாது என்­றும் முதிர்ச்­சி­யு­டன் பேசு­கி­றார்.

“என்­ன­தான் நாம் சிறப்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­னா­லும் மற்­ற­வர்­க­ளின் பங்­க­ளிப்­பும் தேவைப்­படும். இதை மன­திற்­கொண்டே செயல்­ப­டு­கி­றேன்.

“ஊர­டங்கு முழு­மை­யாக முடி­வுக்கு வந்த பிறகு எனது கலைப் பய­ணம் சார்ந்த சில அறி­விப்­பு­களை வெளி­யி­டத் திட்­ட­மிட்­டுள்­ளேன்,” என்று சொல்­லும் அக்­ரஷா தன்­னைப் பற்­றிய கேள்­வி­களுக்கு மட்­டுமே பதி­ல­ளிக்­கி­றார்.

தந்­தை­யின் அர­சி­யல் நட­வ­டிக்­கை­கள் குறித்த கேள்­வி­களை ஷ்ரு­தி­யைப் போன்றே இவ­ரும் தவிர்க்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon