தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியல் பேசும் 'அம்மன்'

1 mins read
8ee7d907-15a4-4f09-bd67-030185c3cb62
படம்: ஊடகம் -

'மூக்குத்தி அம்மன்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தில் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து நையாண்டி செய்யும் வகையில் வசனங்கள் பல இடம்பெற்றிருப்பதாக யூகிக்க வைத்துள்ளது இம்முன்னோட்டம்.

ஆர்.ஜே. பாலாஜியின் வழக்கமான நகைச்சுவையுடன் அரசியலும் பேசும் படம் என்பதால் பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறித்து கேள்விப்பட்ட நயன்தாரா உற்சாகம் அடைந்துள்ளாராம். அவரும் பட வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளாராம்.