பன்னீர்செல்வம்: மனிதனைப் பற்றிய உண்மையைப் பதிவு செய்யும் படம்

30 ஆண்­டு­க­ளா­கத் தமிழ் சினி­மா­வின் முன்­னணி ஒளிப்­ப­தி­வா­ளர்­களில் ஒரு­வ­ரா­கப் பணி­யாற்­றி­வ­ரும் எம்.வி. பன்­னீர்­செல்­வம் ‘மிருகா’ படத்­தின் மூலம் திரைக்­கதை ஆசிரி­ ய­ராக அவ­தா­ர­ம் எடுத்­துள்­ளார்.

ஸ்ரீகாந்த், ராய்­லட்­சுமி இணைந்து நடிக்­கும் இந்­தப் படம் தனது திரைப்­ப­ய­ணத்­தில் அடுத்த திருப்பு­மு­னையை ஏற்­ப­டுத்­தும் என்று சொல்­லும் பன்­னீர், அடுத்து பிர­பு­தே­வாவை வைத்து ஒரு படம் இயக்­க இருப்பதாகவும் கூறப்படு கிறது.

“பிர­பு­தேவா சார் இந்­தி­யில் ‘தபாங்’ படத்தை முடித்­தி­ருந்த நேரத்­தில் அவ­ரி­டம் ஒரு கதை­யைச் சொல்லி இருந்­தேன். அவ­ருக்­குப் பிடித்­தி­ருந்­தா­லும் சல்­மான்­கான் மீண்­டும் கால்­ஷீட் கொடுத்துவிட்டால் நான் மும்­பை­யில் இருந்து கிளம்ப முடி­யாது.

“எனவே, அடுத்த படத்­தை­யும் முடித்த பிறகே உங்­க­ளு­டைய படம் குறித்து யோசிக்க முடி­யும் என்­றார். அவர் எதிர்­பார்த்­தது போலவே சல்­மான் நடிக்­கும் ‘ராதே’ படத்­தின் பணி­கள் தொடங்கிவிட்­டன.

“எனவே, இடை­யில் நண்­பர் நரேஷ் மூலம் ‘மிருகா’ படத்தை இயக்­கும் வாய்ப்­பு தேடி­ வந்­தது. நான் அதை இயக்­கு­வதை விட என்­னைப் போலவே திரைப்­ப­டக் கல்­லூ­ரி­யில் படித்­து திரை­யு­ல­குக்கு வந்­துள்ள என் உத­வி­யா­ளர் பார்த்திபன் இயக்­கட்­டும் என்று நினைத்­தேன். தயா­ரிப்­புத் தரப்­பில் இதற்கு சம்­ம­தித்­த­னர்.

“இந்த ‘மிருகா’ ஒரு திகில் படம். உல­கம் முழு­வ­தற்­கும் அபா­ய­க­ர­மான ஒரு மனி­த­னைப் பற்­றிய கதை. தொடக்­கத்­தில் இந்­தக் கதை­யில் புலி­யைக் கொண்­டு­வ­ர­வில்லை.

“ஆனால் இந்­தியா முழு­வ­தும் திரை­யிட வேண்­டும் என்­றால் பொது­வான ஒரு விஷ­யம் தேவைப்­பட்­டது. என­வே­தான் தலைப்­புக்கு ஏற்ப ஒரு மிரு­கத்­தை கதைக்­குள் கொண்­டு­வ­ரத் தீர்­மா­னித்து புலியைத் தேர்வு செய்­தோம்.

“தன்­னு­டைய பசிக்­கும் பாது­காப்­புக்­கும் மட்­டுமே மிரு­கம் வேட்டை­யா­டும். ஆனால், ஆற­றிவு படைத்த மனி­தன் மட்­டும்­தான் பணம், புகழ், பதவி, கௌர­வம் என அனைத்­துக்­கும் வேட்­டை­யாடு­கி­றான். இந்த உண்­மையை அழுத்­த­மா­கப் பதிவு செய்­தி­ருக்­கி­றோம்,” என்­கி­றார் படத்­தின் கதா­சி­ரி­ய­ரான பன்­னீர்­செல்­வம்.

இது ­கதாநா­ய­கிக்கு முக்கியத்து வம் உள்ள கதை. அது­மட்­டு­மின்றி இது­வரை ஏற்­றி­ராத கதா­பாத்­தி­ரம் என்­ப­தால் ஆர்­வத்­து­டன் நடிக்க சம்­ம­தித்­தா­ராம் ராய்­லட்­சுமி.

நடிகர் ஸ்ரீகாந்த் நாய­க­னா­க­வும் தேவ்­கில் முக்­கி­ய கதா­பாத்­தி­ரத்­தி­லும் நடித்­துள்­ள­னர். அருள்­தேவ் இசை­ய­மைத்­துள்­ளார். மொத்த படத்­தை­யும் 52 நாட்­களில் முடித்­துள்­ள­னர்.

“ஆறு வயது குழந்­தைக்­குத் தாயாக நடிக்­கி­றார் ராய்­லட்­சுமி. இது­வரை அவ­ருக்­குக் கவர்ச்சி சாயம் பூசப்­பட்டு வந்­தது. ஆனால், இதில் அத்­த­கைய ராய்­லட்­சு­மியை ஒரு காட்­சி­யில்­கூட பார்க்க முடியாது. இதில் அவ­ரது நடிப்பு தனி முத்­திரை பதித்­துள்­ளது.

“ஸ்ரீகாந்­தைப் பொறுத்­த­வரை அவ­ரது முதல் படத்­தி­லி­ருந்தே எனக்கு நன்கு தெரி­யும். படிப்­ப­டி­யாக முன்­னேறி நல்ல இடத்தை அடைந்­துள்­ளார். எப்­போ­துமே என்­னு­டன் தொடர்­பில் இருப்­ப­வர். அவ­ரது நடிப்­பும் பேசப்­படும்,” என்­கி­றார் பன்­னீர்­செல்­வம்.

வரும் ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!