நிஷா: காதல் கதையை காஜலே சொல்வார்

நிஷா: காதல் கதையை காஜலே சொல்வார்

1 mins read
a2f3591e-9445-4671-8e59-18f202b9d41a
படம்: ஊடகம் -

நடிகையும் தமது சகோதரியுமான காஜல் அகர்வாலின் திருமணத்துக்கான பணிகளை ஓடியாடி செய்துள்ளார் நிஷா அகர்வால்.

திருமணத்தை கோலாகலமாக நடத்துவதுதான் தமது குடும்பத்தாரின் விருப்பமாக இருந்தது என்றும் கொரோனா விவகாரத்தால் எளிமையாக நடத்தவேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அக்காவின் திருமணத்தை பார்க்கத்தான் எங்கள் தந்தை பல காலமாக காத்திருந்தார். இது எங்கள் குடும்பத்தாருக்கு முக்கியமான தருணம்.

"திருமணத்துக்குப் பின் புகுந்த வீட்டுக்கு சென்றுவிடுவார் என்பதால் அனைவருமே காஜலுடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறார்கள். அதனால் எனக்குக்கூட அக்காவின் அருகில் இருக்க முடியவில்லை," என்கிறார் நிஷா.

மணமகன் கௌதம் மிகவும் நல்லவர் என்றும் அவரைத் தங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ள அவர், காஜலின் காதல் கதை குறித்து தாம் ஏதும் சொல்ல விரும்பவில்லை என்கிறார்.

திருமணம் முடிந்த பிறகு காஜலே இதுகுறித்து விரிவாகப் பேச இருக்கிறாராம்.