அண்மைய சில வாரங்களாகப் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் நடிகர் சிம்பு. அவற்றுள் பரதநாட்டியப் பயிற்சியும் (படம்) அடங்கும். நடிகை சரண்யா மோகன்தான் சிம்புவுக்கு தற்போது பரதப்பயிற்சி அளித்து வருகிறார். பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சிம்பு வெளியிட, ரசிகர்கள் பாராட்டித் தள்ளிவிட்டனர். இத்தனைக்கும் புதுப்படத்தில் இடம்பெறும் நடனத்துக்காக சிம்பு பயிற்சி மேற்கொள்ளவில்லையாம். தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே அவர் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அண்மைய சில மாதங்களில் மட்டும் 30 கிலோ அளவுக்கு தன் உடல் எடையைக் குறைத்துள்ளார் சிம்பு. தற்போது 'ஈஸ்வரன்' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
பரத நாட்டியப் பயிற்சி பெறும் சிம்பு; படத்துக்காக இல்லையாம்
1 mins read
-

