நிவேதா: நடிப்பால் மகிழ்விப்பேன்

நிவேதா: நடிப்பால் மகிழ்விப்பேன்

2 mins read
d9d59ed6-857c-4452-a9d4-ce964f7d55e3
நிவேதா தாமஸ் -

தமது இரு­பத்து ஐந்­தா­வது பிறந்­த­நா­ளைக் கொண்­டாடி உள்­ளார் நிவேதா தாமஸ்.

இதை­ய­டுத்து அவ­ரது ரசி­கர்­கள் சமூக வலைத்­தளங்­கள் மூலம் அவ­ருக்கு வாழ்த்து மழை பொழிந்­துள்­ள­னர். இத­னால் மிகுந்த உற்­சா­கத்­தில் இருக்­கி­றா­ராம்.

பிறந்­த­நா­ளை­யொட்டி அண்­மை­யில் எடுத்­துக்­கொண்ட தனது புகைப்­ப­டங்­கள் சில­வற்றை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்­டுள்­ளார் நிவேதா. அவற்­றில் மிக அழ­காக இருப்­ப­தா­க­வும் அப்­ப­டங்­கள் வித்­தி­யா­ச­மாக உள்­ளன என்­றும் பல­ரும் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் எனப் பல்­வேறு மொழி­க­ளி­லும் முத்­திரை பதித்து வரும் நிவே­தா­வுக்கு உரிய வாய்ப்­பு­கள் கிடைத்து வரு­கின்­றன. அண்­மைய சில ஆண்­டு­க­ளாக தெலுங்­கில் இவ­ருக்கு அதிக வர­வேற்பு உள்­ளது.

கடந்த 2016ம் ஆண்டு 'ஜென்­டில்­மேன்' படத்­தில் நானி­யு­டன் நடித்­தி­ருந்­தார். அதற்கு நல்ல வர­வேற்பு கிடைத்த நிலை­யில் அடுத்த ஆண்டே நானி­யு­டன் மீண்­டும் இணைந்து நடித்த 'நின்­னுக்­கோரி' படம் இவரை தெலுங்கு தேசத்­தில் உச்­சத்­துக்­குக் கொண்டு சென்­றது.

"இப்­போ­தும் நல்ல படங்­களில் நடித்து வரு­கி­றேன். ரசி­கர்­கள் என்­மீது மிகுந்த அன்பு காட்டி வரு­கின்­ற­னர். நான் நடிக்­கும் படங்­கள் மட்­டு­மல்­லாது, எனது அனைத்­துச் செயல்­பா­டு­க­ளை­யும் ரசி­கர்­கள் பாராட்­டு­வது நெகிழ்ச்சி அளிக்­கிறது.

"இப்­போ­தும்­கூட எனது பிறந்­த­நா­ளை­யொட்டி, சில 'ஹேஷ்­டேக்'குகளை உரு­வாக்கி ஆயி­ரக்­கணக்­கா­னோர் தங்­க­ளது வாழ்த்­து­க­ளைப் பதிவு செய்­துள்­ள­னர். எனவே ரசி­கர்­க­ளுக்கு மிக­வும் நன்­றிக்­க­டன் பட்­டுள்­ளேன்," என்­கி­றார் நிவேதா.

சமூக வலைத்­த­ளங்­களில் இவரை ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பின்­தொ­டர்­கின்­ற­னர். நிவேதா அணி­யும் காத­ணி­கள், வளை­யல்­கள், நெற்­றிப்­பொட்டு, உதட்­டுப்­பூச்சு உட்­பட எது­வாக இருப்­பி­னும் அவை ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்­கின்­றன. ஏரா­ள­மான ரசி­கை­கள் அவற்­றைத் தேடிப்­பி­டித்து வாங்கி பயன்­ப­டுத்து­கின்­ற­னர்.

தற்­போது பவன் கல்­யா­ணு­டன் 'வக்­கால் சாப்' என்ற படத்­தி­லும் நிக்­கில் சித்­தார்த்­தா­வு­டன் 'சுவாஸா' என்ற படத்­தி­லும் நடித்து வரு­கி­றார் நிவேதா.

"மேலும் பெய­ரி­டப்­ப­டாத ஒரு படத்­தி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளேன். கூடு­மா­ன­வரை வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்கே முன்­னு­ரிமை அளிக்­கி­றேன்.

"ரசி­கர்­கள் என்­னி­டம் காட்டி வரும் அன்பு ஒரு­வ­கை­யில் வியக்க வைக்­கிறது. திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தைத் தவிர, அவர்­க­ளுக்­காக நான் வேறு எதை­யும் பெரி­தா­கச் செய்­து­வி­ட­வில்லை. எனவே, நடிப்­பின் மூலம் அவர்­க­ளைத் தொடர்ந்து மகிழ்­விப்­பேன்," என்­கி­றார் நிவேதா தாமஸ்.