வில்லியாக ஐஸ்வர்யா ராய்

3 mins read
e57e2561-e73f-4c81-83ff-d2ea28c2202e
படம்: ஊடகம் -

அம­ரர் கல்கி கிருஷ்­ண­மூர்த்தி எழு­திய, தமிழ் வர­லாற்று நாவல் பிரி­யர்­களுக்கு எப்போதும் பிடித்த தமிழ் இலக்­கிய நாவ­லான 'பொன்­னி­யின் செல்­வன்' கதை­யைத் தழுவி ஒரு படத்தை இயக்க திட்­ட­மிட்­டுள்­ளார் இயக்­கு­நர் மணி­ரத்­னம். அதில் நந்­தினி, மந்­தா­கினி என இரண்டு வேடங்­களில் நடிக்க ஐஸ்­வர்யா ராய் ஒப்­பந்­தம் ஆகி­யி­ருக்­கி­றார்.

இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தின் கன­வுப்­ப­டம் 'பொன்­னி­யின் செல்­வன்'. இந்த நாவ­லைப் பட­மாக்­கப் பல ஆண்­டு­க­ளாக முயற்சி செய்து வரு­கி­றார் மணி­ரத்­னம். முத­லில் வரவு செலவு கணக்­கு­க­ளால் தள்­ளிப்­போய்க்கொண்டு இருந்­தது. அது ஒரு முடி­வுக்கு வந்­தது. அத­னைத்­தொ­டர்ந்து வடக்­குப் பகு­தி­யில் உள்ள காட்­டுப் பகு­தி­களில் சில நாட்­கள் படப்­பி­டிப்பு நடந்து வந்­தது. அத­னைத் தொடர்ந்து ஹைத­ரா­பாத்­தில் படப்­பி­டிப்பு நடத்­த­லாம் என்று முடி­வுக்கு வந்­த­னர். அந்த சம­யத்­தில் கொரோனா வந்து மீண்­டும் மாதக் கணக்­கில் படப்­பி­டிப்பு தள்­ளிப்போய்க்­கொண்டு இருக்­கிறது.

இதற்­கி­டை­யில் யாருக்கு என்­னென்ன கதா­பாத்­தி­ரங்­கள் என்­பது குறித்த தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. அதன்­படி, அருள்­மொழி வர்­ம­னாக ஜெயம் ரவி, ஆதித்ய கரி­கா­ல­னாக விக்­ரம், சுந்­தர சோழ­ராக அமி­தாப்பச்­சன், வல்­ல­வ­ரா­யன் வந்­தி­யத்­தே­வ­னாக கார்த்தி, நந்­தி­னி­யாக ஐஸ்­வர்யா ராய், குந்­தவை நாச்­சி­யா­ராக கீர்த்தி சுரேஷ் ஆகி­யோர் தேர்­வா­கி­னர். மேலும் பிர­பல தெலுங்கு நடி­கர் மோகன் பாபு, பார்த்­தி­பன், அமலா பால், திரிஷா ஆகி­யோ­ரும் ஒப்­பந்­தம் ஆகி­யுள்­ள­னர். இன்­னும் இவர்­க­ளுக்­கான கதா­பாத்­தி­ரங்­கள் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

தற்­பொ­ழுது 150 பேரை வைத்து படப்­பி­டிப்­பு­கள் நடத்­த­லாம் என்று அறி­விப்பு வெளி­யா­ன­தும் அடுத்­த கட்ட நட­வ­டிக்­கை­யில் இறங்கி இருக்­கிறது படக்­குழு.

இந்­நி­லை­யில் புதிய வேடத்­தில் இயக்­கு­நர் பாலாஜி சக்­தி­வேல் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்டு இருக்­கி­றார். கதைப்­படி பெரிய பழு­வேட்­ட­ரை­யர் மற்­றும் சின்ன பழு­வேட்­ட­ரை­யர் ஆகிய இரண்டு வேடங்­களில் சரத்­கு­மார், பிரபு நடிப்­ப­தாக இருந்­தது. பிர­பு­வுக்கு ஜோடி­யாக நந்­தினி வேடத்­தில் ஐஸ்­வர்­யா­ராய் நடிக்க இருந்­தார். தற்­போது இந்த ஜோடியை மணி­ரத்­னம் குலுக்­கல் முறை­யில் மாற்றி இருக்­கி­றார். அதன்­படி பிரபு, சரத்­கு­மார் இரு­வ­ரை­யும் வேறு முக்­கிய வேடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்டு, பெரிய பழு­வேட்­ட­ரை­யர், சின்ன பழு­வேட்­ட­ரை­யர் வேடங்­களில் பாலாஜி சக்­தி­வே­லும் நிழல்­கள் ரவி­யும் நடிக்க இருக்­கி­றார்­கள்.

பெரிய பழு­வேட்­ட­ரை­யர் மனை­வி­யாக ஐஸ்­வர்­யா­ராய் நடிப்­ப­தால், பாலாஜி சக்­தி­வே­லுக்கு ஜோடி­யாக ஐஸ்­வர்­யா­ராய் நடிப்­பார் என்று தெரி­கிறது. மணி­ரத்­னம் குலுக்­கி­யி­ருக்­கும் இந்த குலுக்­க­லில் பாலாஜி சக்­தி­வேல் ஐஸ்­வர்­யா­ராய் என்ற 'ஜாக்­பட்டை' அவருக்கு ஜோடி­யாக்கி இருக்­கி­றார். ஆனால் இது­தான் இறு­தி­யான முடிவா? அல்­லது மீண்­டும் மணி­ரத்­னம் மறு­கு­லுக்­கல் நடத்­து­வாரா? என்­ப­தெல்­லாம் போகப் போகத்­தான் தெரி­யும் என்­கிறது படக்­குழு.

இந்­நி­லை­யில் பொன்­னி­யின் செல்­வன் படப்­பி­டிப்புத் திட்­டங்­கள் ஒட்டு மொத்­த­மாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. நவம்­பர் மாதம் படப்­பி­டிப்­புக்­குத் திட்­ட­மி­டப்­பட்­டது. வெளி­நா­டு­களில் தாய்­லாந்து, இலங்கை போன்ற நாடு­களில் படப்­பி­டிப்பு நடத்த முடிவு செய்­யப்­பட்டு அதற்­கான அனு­ம­திக்­காக காத்­தி­ருந்­த­னர். ஆனால், கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் படப்­பி­டிப்பு நடத்த முடி­யாத சூழலை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஏற்­கெனவே பிர­பாஸ் நடிக்­கும் 'ராதே ஷ்யாம்' படக்­கு­ழு­வி­னர் இத்­தா­லி­யில் படப்­பி­டிப்பு நடத்­தச் சென்­ற­னர். ஆனால் அங்­கு அமுல்படுத்தப்பட்ட கொரோனா கட்­டுப்­பா­டு­கள் படக் குழு­வைப் படப்­பி­டிப்பு நடத்­தப் போராட வைத்­தது. அத­னால் 'ராதே ஷ்யாம்' படக்­குழு அங்­குப் படப்­பி­டிப்பை நிறுத்தி­விட்டு இந்­தியா திரும்­பி­யது.

இதை­யெல்­லாம் கேள்­விப்­பட்ட மணி­ரத்­னம் படக்­குழு அதிர்ச்சி அடைந்­தது. இந்­நி­லை­யில் 'பொன்­னி­யின் செல்­வன்' படப்­பி­டிப்பை இந்­தி­யா­வி­லும் அரங்­கு­கள் அமைத்­தும் நடத்த முடிவு செய்­துள்­ள­னர். இப்­ப­டம் இரண்டு பாக­மாக வெளி­யாக இருந்­தா­லும் ஒரே கட்­ட­மாக இரண்­டாம் பாகத்­துக்­கான காட்­சி­களும் பட­மாக்­கப்­ப­டு­கின்­றன.

படத்­திற்கு ஏ.ஆர்.ரஹ்­மான் இசை அமைக்­கி­றார். 'லைகா' நிறு­வ­னம் இப்­ப­டத்­தைத் தயா­ரிக்­கிறது. ஏற்­கெனவே இந்­நி­று­வ­னம் கமல் நடிக்க ஷங்­கர் இயக்­கும் 'இந்­தி­யன் 2' படத்­தைத் தயா­ரிக்­கிறது. அதில் எதிர்­பா­ராத விபத்து, படப்­பி­டிப்பு தடை, இயக்­கு­ந­ரு­டன் பிரச்­சினை, 'பட்­ஜெட்' குறைப்பு விவ­கா­ரம் என்று பல சிக்­கல்­களை நிறு­வ­னம் சந்­தித்து வரு­கிறது. அந்­தப் பிரச்­ச­னை­கள் எது­வும் 'பொன்­னி­யின் செல்­வன்' படப்­பி­டிப்­பைப் பாதிக்­கக்­கூ­டாது என்­ப­தில் அக்­க­றை­யாக உள்­ள­னர் படக்­கு­ழு­வி­னர்.

கதைப்­படி நந்­தினி கதா­பாத்­தி­ரம் பேர­ழகி. கதை­யின் வில்­லி­யான இந்­தக் கதா­பாத்­தி­ரம், பல்­வேறு வேடங்­கள் தரித்து ஏமாற்று வேலை செய்­யும். எனவே, 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் ஐஸ்­வர்யா ராயை வித­வி­த­மான தோற்­றங்­களில் காண­லாம்.