65வது பிறந்தநாள்; ராஜ தோரணையில் கம்பீரமாக கமல்

65வது பிறந்தநாள்; ராஜ தோரணையில் கம்பீரமாக கமல்

1 mins read
370641fe-d4a2-47e3-ac2b-02f6feaff717
படம்: ஊடகம் -
Google News Preferred Icon

லோகேஷ் கனகராஜ் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு ரஜினியை வைத்து இயக்குவதாக இருந்தார்.

அந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக பேசப்பட்டது. ஆனால், கொரோனா வந்து ரஜினி, கமல் இணையும் அந்த திட்டத்தை தகர்த்துவிட்டது.

அதன்பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனே நடிப்பதாக முடிவானது.

'பிக்பாஸ்' ஒருபக்கம், தேர்தல் வேலைகள் மறுபக்கம் என்று பரபரவென்று இருக்கும் கமல்ஹாசன் விரைவில் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இன்று அவரின் 65வது பிறந்தநாள். அதை முன்னிட்டு, ராஜ உடையில் கம்பீரமாக மிரட்டுவதுபோல் நிற்கும் கமல்ஹாசனின் படத்தை வெளி்யிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனின் கவச உடையில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் இருப்பதால், கட்சியை முன்னிலைப்படுத்தும் விதமாக படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

கம்பீரமாக நிற்கும் அவர் படத்தை அவரின் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கலையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்