நெல்சனைத் தேடி வந்த அதிர்ஷ்ட தேவதை

நெல்சனைத் தேடி வந்த அதிர்ஷ்ட தேவதை

2 mins read
a5df1b16-a464-4e8a-88e4-2209bf70bc64
படம்: ஊடகம் -

'தள­பதி' விஜய் நடிப்­பில் தீபா­வ­ளிக்கு வெளி­யாக இருந்த 'மாஸ்­டர்' திரைப்­ப­டம் கொரோனா தொற்­றி­னால் தள்­ளிப்­போ­னது.

அந்­தப் படத்­தைத் தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முரு­க­தாஸ் இயக்­கத்­தில் நடிப்­ப­தாக இருந்­தது. அந்த முடிவை மாற்றி தற்­பொ­ழுது இயக்கு­­நர் நெல்­ச­னுக்கு அந்த வாய்ப்பை அளித்து இருக்­கி­றார் விஜய்.

விஜய் தற்­போது லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் 'செவன்' ஒளிப்­ப­டத்­திரை லலித் தயா­ரிப்­பில் 'மாஸ்­டர்' படத்­தில் நடித்து இருக்­கி­றார். இந்­தப் படத்­தில் விஜய்­யு­டன் விஜய் சேது­பதி, மாள­விகா மோக­னன் உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர்.

இந்த படம் முத­லில் ஏப்­ர­லில் வெளி­யா­கும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக படம் தள்ளிப்போய் தீபா­வ­ளிக்கு வெளி­யா­கும் என்று ரசி­கர்­கள் மிக­வும் ஆவ­லு­டன் இருந்தனர்.

தற்­பொ­ழுது திரை­ய­ரங்­கு­கள் திறந்­தா­லும் குறைந்த அளவு மக்­களே திரை­ய­ரங்கு செல்லமுடி­யும் என்ற கட்­டுப்­பாட்­டி­னால் வரு­மா­னம் குறை­யும் என்பதால் படத்தை மீண்டும் தள்ளி வைத்­துள்­ள­னர்.

இந்த இடைப்­பட்­ட காலத்­தில் தளர்ந்­து­வி­டாத படக்­கு­ழு­வி­னர் ஊர­டங்கு நேரத்­தைப் பயன்­ப­டுத்தி தமி­ழு­டன் மலை­யா­ளம், கன்­ன­டம், தெலுங்கு, இந்தி என 5 மொழி­களில் படத்தை வெளி­யிடு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கின்றனர்.

அடுத்த ஆண்டு ஆரம்­பத்­தில் கொரோ­னா­வின் தாக்­கம் குறைய வாய்ப்பு இருக்­கிறது என்­றும் அத­னால் திரை­ய­ரங்குகளில் படம் பார்ப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்று கூறப்படுவதால் வரும் பொங்­க­லுக்கு வெளி­யீடு செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முரு­க­தாஸ் இயக்­கத்­தில் விஜய் நடிக்க இருப்­ப­தாகக் கூறப்­பட்­டது. ஆனால் அந்த படம் தள்ளி போன­தால் விஜய் வேறு இயக்­கு­நர்­க­ளி­டம் கதை கேட்டு வந்­த­தாக முன்பு செய்தி வெளி­யா­னது.

அதன்­படி பேர­ரசு, சுதா கொங்­கரா, மகிழ் திரு­மேனி என பல பெயர்­கள் அடி­பட்­டன. இந்த வரி­சை­யில் 'கோல­மாவு கோகிலா' பட இயக்­கு­நர் நெல்­ச­னும் இணைந்தார்.­

நெல்­சன் சொன்ன குடும்ப, நகைச்­சுவை கதை விஜய்க்கு மிக­வும் பிடித்துப் போன­தால் அதிர்ஷ்ட தேவதை விஜய் மூலமாக நெல்சனைத் தேடி வந்திருக்கிறாள். அந்த தேவதையை இறுகப் பிடித்துக்கொண்டு விட்டார் இயக்குநர் நெல்சன்.

நெல்­சன் தற்­பொழுது சிவ­கார்த்­தி­கே­யனை வைத்து 'டாக்­டர்' படத்தை இயக்கி வரு­கி­றார். இன்­னும் 4 நாட்­கள் மட்­டுமே படப்­பி­டிப்புகள் இருக்­கின்­றன. இந்­தப் படத்தை முடித்த பின் இவர் விஜய் படம் தொடர்­பான வேலைகளைத் துவங்­கு­வார் என்று ­தெ­ரி­கிறது.

விஜய்க்கு கூறிய கதையை முத­லில் சிவ­கார்த்­தி­கே­ய­னி­டம்­தான் நெல்­சன் கூறி­யி­ருந்­தார். 'டாக்­டர்' படத்­திற்கு பிறகு அது­பற்றி பேச­லாம்,' என்று சிவ­கார்த்­தி­கே­யன் முடிவு செய்­தி­ருந்த நிலை­யில்­தான், அந்தக் கதையை விஜய்க்கு கூறி அவ­ரின் சம்­ம­தத்­தை­யும் பெற்று விட்­டார் நெல்­சன்.

எனவே, இது சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு கோபத்தை ஏற்­ப­டுத்­துமா என்­றால் அது­தான் இல்­லை­. விஜய்க்­கும் சிவ­கார்த்­தி­கே­ய­னுக்­கும் இடையே நல்ல நட்பு உண்டு. தான் நடிக்க வேண்­டிய கதை­யில் விஜய் நடிப்­பது பெரு­மை­தான் என்று சிவ­கார்த்­தி­கே­யன் கூறி­ய­தாக கேள்வி.