'படத்தை உருவாக்கிய எங்களுக்கு அதிக வருத்தம்'

'படத்தை உருவாக்கிய எங்களுக்கு அதிக வருத்தம்'

1 mins read
04c31008-104f-48dc-a39d-e124f0509c76
படம்: ஊடகம் -

'மாஸ்டர்' படம் தாமதமாவதையடுத்து 'படத்தின் முன்னோட்டக் காட்சியையாவது வெளியிடுங்கள்,' என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "மாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் எப்படி வருத்தமாக இருக்கிறார்களோ, அதை உருவாக்கி வைத்துவிட்டு ரசிகர்களிடம் காட்ட முடியாமல் அவர்களைவிட அதிக வருத்தத்தில் படக்குழுவினர் இருக்கிறோம்.

"படத்தை எப்போது வெளியிட முடியும் என்பது தெரியாத நிலையில் முன்னோட்டக் காட்சி வெளியிடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அது எந்த விதத்திலும் படத்திற்கு உதவாது.

"இப்போதுதான் திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்திருக்கிறது.

"எனவே, திரையரங்குகள் திறக்கப்பட்டு மக்கள் வர ஆரம்பித்தவுடன் கண்டிப்பாக 'மாஸ்டர்' பற்றிய செய்திகள் வரும். விஜய் ரசிகர்களுக்காக இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்," என்று தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்